பள்ளிப் புத்தகங்களில் உள்ள திப்பு சுல்தான் குறித்த வரலாற்றில் எந்த மாற்றமும் செய்யப்படாது என கர்நாடக அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக திடமாகப் போராடியவர் திப்பு சுல்தான். இவரின் பிறந்தநாளை அரசு விழாவாக காங்கிரஸ் அரசு கொண்டாடியது. ஆனால், பாஜகவோ திப்பு சுல்தான் இந்துக்களைக் கொடுமைப்படுத்தியவர் என்றும் அவர் ஒரு தீவிரவாதி எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தது. இது பெரும் சர்ச்சையாக மாறியது. மேலும் பள்ளிப் புத்தகங்களில் உள்ள திப்பு சுல்தான் வரலாற்றை நீக்குவோம் […]
