இந்தியாவில் ISIS பயங்கரவாத அமைப்பின் முதல் கிளை உருவாகியுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2013_ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள சிரியா நாட்டு அரசுப் படையை எதிர்த்து போரிட்ட அல்நுஸ்ரா முன்னணி என்கின்ற அமைப்பும், அல்கொய்தா அமைப்பின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ISIS என்கின்ற புதிய பயங்கரவாத அமைப்பு உருவாகியது. இந்த பயங்கரவாத அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. கடந்த 2014_ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஈராக்கிற்குள் நுழைந்த ISIS தீவிரவாதிகள் சுமார் 30 ஆயிரம் வீரர்களை தங்களது இயக்கத்தின் கட்டுப்பாட்டில் […]
