கல்யாணமாகி 4 வருடங்களே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் மும்பை தனியார் நிறுவன பணியாளாரான சுடலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடலைமுத்து தனது உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புதுப்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது சுடலைமுத்து – கண்ணகி தம்பதியருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]
