அரசு ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரத்தில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி மாவட்ட நில அளவை அலுவலகத்தில் தலைமை வரைவாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயராஜ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கேரள மாநிலத்தில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஜெயராஜின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் […]
