கட்டிட காண்டிராக்டர் வீட்டில் மர்ம நபர்கள் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் பாக்கியசாமி என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனது மனைவி மற்றும் மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர்கள் பாக்கியசாமியின் வீட்டின் பின்பக்க காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்துள்ளனர். இதனை அடுத்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். […]
