தமிழ் வழிபாட்டு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழ் முறைப்படி நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் பிப்ரவரி 5ஆம் நாள் நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டுகோள் விடுத்து, தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழு நடத்துகிற மாநாடு முன்வைத்திருக்கும் கோரிக்கை அனைவருடைய கவனத்திற்குமானது. திராவிடக் கட்டடக்கலை என உலக […]
