கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செல்லிபாளையம் கிராமத்தில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள், விவசாயிகள் வயலில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்த வெங்காயம் மூட்டைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து துறையூர் காவல் […]
