Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற குடமுழுக்கு திருவிழா…. பக்தர்கள் தரிசனம்…!!

கற்பக விநாயகர் ஆலயத்தில் குடமுழுக்கு திருவிழா நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவெண்காடு மேலவீதியில் கற்பக விநாயகர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் குடமுழுக்கு திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் யாகபூஜைகள் நடைபெற்றுள்ளது. மேலும் மேளதாளம் முழங்க புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அதன்பின் மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்த குடமுழுக்கு திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றுள்ளனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆலயம்…. மாவிளக்கு ஏற்றி வழிபாடு…. பக்தர்கள் தரிசனம்…!!

அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் மகாசிவராத்திரி சிறப்பாக நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள முடிதிருச்சம்பள்ளியில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் வருடந்தோறும் மகாசிவராத்திரியின் மறுநாள் மயானகொள்ளை திருவிழா நடைபெறும். அதேபோல இந்த வருடமும் மகாசிவராத்திரியின் மறுநாள் மயானகொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த மகாசிவராத்திரியை முன்னிட்டு அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாசி மக பெருவிழா…. அம்மன் வீதி உலா…. பக்தர்கள் தரிசனம்…!!

மாசி மக பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்றுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயம் அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம் என கூறப்படுகிறது. இந்நிலையில் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மாசி மக பெருவிழா தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ராதா கல்யாண விழா…. நடைபெற்ற நிகழ்ச்சிகள்…. பக்தர்கள் தரிசனம்…!!

ராதா கல்யாண விழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் பெற்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள காவிரி கரை அருகே ராதா கல்யாண விழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் ராதா கல்யாண விழா நடைபெற்றுள்ளது. இதில் இசை நிகழ்ச்சிகள், நாம சங்கீர்த்தனம் மற்றும் பஜனை போன்றவை நடைபெற்றுள்ளன. அதன்பின் ஆஞ்சநேயர் உற்சவத்துடன் ராதா கல்யாண விழா சிறப்பாக நிறைவுபெற்றுள்ளது. இதில் ஏராளமான […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குழந்தை அய்யனார் ஆலய குடமுழுக்கு விழா…. பக்தர்கள் தரிசனம்…!!

குழந்தை அய்யனார் ஆலய குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வலிவலம் வடக்குத் தெருவில் குழந்தை அய்யனார் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 14-ஆம் தேதி நவக்கிரக ஹோமம், கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, பூர்வாங்க பூஜை மற்றும் தன பூஜைகள் நடைபெற்றுள்ளன. அதன்பின் லட்சுமி ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி ஹோமம் நடைபெற்றுள்ளது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளன. இதனையடுத்து 4-ஆம் கால யாகசாலை பூஜை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆலயம்…. முக்குளங்களில் தீர்த்தவாரி…. பக்தர்கள் தரிசனம்…!!

திருவெண்காட்டிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயத்தில் அஸ்திரதேவருக்கு  தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்தப் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சிவனின் 3 கண்களிலிருந்து தோன்றிய தீப்பொறிகளால் 3 குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. அப்படி உருவான குளங்கள் அக்னி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இத்தகைய சிறப்பு பெற்ற 3 குளங்களில் மாசி மாத பிறப்பையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது. மேலும் மேளதாளம் முழங்க அஸ்திரதேவருக்கு முக்குளங்களில் தீர்த்தவாரி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. மகா தீபாராதனை…. பக்தர்கள் தரிசனம்…!!

சுரிமாரியம்மன் ஆலயத் திருவிளக்கு பூஜையில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூரில் சுரிமாரியம்மன் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றுள்ளது. இந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் பலர் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்துள்ளனர். இந்த திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடமுழுக்கு திருவிழா…. கோலாகல கொண்டாட்டம்…. பக்தர்கள் தரிசனம்…!!

குடமுழுக்கு திருவிழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சந்தப்படுகை கிராமத்திலுள்ள பழமை வாய்ந்த சாந்த முத்துமாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு திருவிழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் ஆலயத்தின் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு திருவிழா நடைபெற்றுள்ளது. இதேபோன்று குட்டியாண்டவர், ஆஞ்சநேயர், சந்தான கணபதி மற்றும் வள்ளி-தெய்வானையுடனாகிய சுப்பிரமணியன் ஆலயங்களிலும் குடமுழுக்கு திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்துள்ளனர். மேலும் குடமுழுக்கு திருவிழாவையொட்டி பவளக்காளி, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சாட்டையடி திருவிழா” ஊர்வலமாக வந்த பக்தர்கள்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…!!

சாட்டையடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பூசாரிபாளையம் பகுதியில் அடைக்கலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாட்டையடி திருவிழா நடைபெற்றுள்ளது.கடந்த 6-ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு கணபதி பூஜை தொடங்கி, 8 மணிக்கு கொடியேற்றம், முத்திரை வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து இரவு 11 மணிக்கு பிடி மண் எடுத்தல், அம்மன் ஆற்றங்கரைக்கு செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சாட்டையடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மலை முருகன் கோவில்…. பக்தர்கள் அனுமதி இல்லை…. கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வழிபாடு….!!

பக்தர்கள் இன்றி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று உள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பகுதியில் மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுவாமிக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு மஞ்சள், இளநீர், பன்னீர், பால், சந்தனம், விபூதி, தயிர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பின் சுவாமிக்கு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த கோவிலில் சுவாமிக்கு பக்தர்கள் இல்லாமல் சிறப்பு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு…. மலர்களால் செய்யப்பட்ட அலங்காரம்…. திரளாக கலந்து கொண்ட பக்தர்கள்….!!

புன்னம்சத்திரம் மற்றும் காகிதபுரம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காகிதபுரம் பகுதியில் சுப்ரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருத்திகையை ஒட்டி முருகனுக்கு பால், பழம், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மலர்களால் முருகன், வள்ளி, தெய்வானை அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. இதேபோல் புன்னம்சத்திரம் அருகே உள்ள பாலமுருகன் கோவிலில் கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

22 வருசத்துக்கு பிறகு…. வைதீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழா…. 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது….!!

வைதீஸ்வரன் கோவில் குடமுழுக்கையொட்டி 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு கால பூஜைகள் நடைபெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இப்போது தனி சன்னதியில் செல்வ முத்துக்குமார சுவாமி, நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 29-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனால் 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றது. பின்னர் இந்த 147 யாககுண்டங்களில் 108 வகையான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகாலிங்கசுவாமி கோவில்… மருதா நாட்டியாஞ்சலி விழா… சிறப்பித்த 300 பரத கலைஞர்கள்…!!

மகாலிங்க ஸ்வாமி கோவிலில் மருதா நாட்டியாஞ்சலி விழா 300க்கும் மேற்பட்ட கலைஞர்களால் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றுமுன்தினம் சிவராத்திரி விழாவையொட்டி மாலை 6 மணி முதல் நான்கு கால பூஜை நடைபெற்று சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்று ஸ்வாமி மலர்களால்  அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் மருதா நாட்டியாஞ்சலி குழுவினரின் பத்தாவது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… மேலதாளத்துடன் எடுத்து வரப்பட்ட கலசம்… திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்…!!

திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் சீரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் நேற்று அதிகாலையில் யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்ட பின்னர் கலசங்களுக்கு பூஜை செய்யப்பட்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்பின் கோபுரத்தில் கலசத்தை கோபுரத்தில் ஏற்றி பின் புனித நீரை ஊற்றி பூஜை செய்த கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மீண்டும் தொடங்கியாச்சு… விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…!!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகங்களும் பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வரும். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும் தங்க தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தமிழகத்திலும் திருப்பதி வரப்போகுது… ஏழுமலையான் கோவில்… முதல்வர் அடிக்கல் நாட்டினார்…!!

ஏழுமலையான் கோவிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 ஏக்கர் 50 சென்ட் பரப்பளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் அதாவது ஏழுமலையான் கோவில் கட்டப்பட இருக்கிறது. மேலும் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையையும் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, அமைச்சர் சிவி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில்… பூச்சொரிதல் விழா… வேண்டுதலை நிறைவேற்றிய பக்கதர்கள்…!!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து மாசி திருவிழாவும் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் பூச்சொரிதல் விழா இன்று காலை நடைபெற்றுள்ளது. இந்த பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கைகளில் பூ தண்டுகளை ஏந்தி நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு சாத்தி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும் மாவிளக்கு எடுத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஜம்முனு நடந்த வருஷாபிஷேகம்… குவிந்த பக்கதர்கள் கூட்டம்… களைகட்டிய தி.மலை …!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 4 ஆண்டுகள் ஆகின்றது. இதை முன்னிட்டு நேற்று வருஷாபிஷேக விழா நடைபெற்றதில் அருணாச்சலேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்துள்ளது. அதன்பின் 6 மணிக்கு மேல் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் வீதியுலா நடைபெற்றுள்ளது. இந்த ஏற்பாடுகளை நாட்டுக்கோட்டை நகரத்தார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆகியோர்கள் கவனித்துக் கொண்டனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாசி திருவிழா…. வீடுவீடாக வசூலிப்பு…. கோபம் கொண்ட வாலிபர்….. வெட்டு வாங்கிய தலைவர்….

மாசி திருவிழாவிற்காக பொதுமக்களிடம் பணம் வசூலித்தது பிடிக்காமல் தலைவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் காலனியை சேர்ந்தவர் பாலையா. கிராம தலைவரான இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா நடைபெற இருப்பதையொட்டி விழா சிறப்பாக நடைபெற வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார். தலைவரின் செயலிற்கு அகரம் காலனியை சேர்ந்த சதீஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் சதிஷ் பாலையா இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் கோபம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாலிபர்களை கத்தியால் குத்திய பழவியாபாரி

வாய் தகராறு காரணமாக பழ  வியாபாரி வாலிபர்கள் இருவரை கத்தியால் குத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பூச்சநாயகம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி மற்றும் கணேசன் கூலித் தொழிலாளர்களான இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். கோவில் திருவிழா நடந்து வரும் நிலையில்  நேற்றிரவு கணேசன் மற்றும் கார்த்தி இருவரும் கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளனர். கோபியை  சேர்ந்த பாபு என்கிற மேகநாதன் என்பவர் தள்ளுவண்டியில் அண்ணாச்சி பழம் வைத்து வியாபாரம் செய்து வருபவர். கார்த்தியும் கணேசனும் அவ்வழியாக சென்ற போது […]

Categories

Tech |