கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத திருமூல மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் மடாதிபதி ஜீயர் முன்னிலையில் மணவாளமா முனிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
