தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் 500 கோவில்களைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அறிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சியானது தொலைபேசி மூலம் தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி பேட்டி அளித்துள்ளார். அப்போது வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக 4.26 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் […]
