கோவில் உண்டியலை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதாமூர் பூந்தோட்டம் நல்லேரிக்கரை திரவுபதி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் பூசாரியாக அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் பூஜைகளை முடித்துவிட்டு, கோவிலை பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலில் இரும்புக் கம்பிகள் மூலமாக பெயர்த்தெடுத்து […]
