விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ’96’ திரைப்படம். இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருந்தாலும் பிரேம்குமார் ’96’ திரைப்படத்தில்தான் இயக்குநராக அறிமுகமானார். திரைப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் கன்னடத்தில் ’99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் பாவனாவும் கணேஷும் நடித்திருந்தனர். இப்போது தெலுங்கிலும் ’96’ […]
