இலகுரக போர் விமானம் தேஜாஸ் பைத்தான்-5 ஏவுகணைகள் மூலம் இலக்குகளை துல்லியமாக தாக்கி சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருவில் அமைந்துள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் பொதுத்துறை நிறுவனம் உள்நாட்டிலேயே உருவாக்கிய இலகுரக போர் விமானம் தேஜாஸ். கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ரூபாய் 48 ஆயிரம் கோடி செலவில் இந்த வகை 89 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில் ஐந்தாவது தலைமுறை பைத்தான்-5 வானிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணையை எடுத்துச் செல்வதற்குத் தேஜாஸ் போர் விமானங்களுக்கு […]
