இயல்பாகவே நமக்கு நற்குணங்கள் ஏராளம் இருந்தாலும், அதனை மற்றவர்களிடம் காண்பிப்பது நமது வெளிப்புறத் தோற்றம் தான். வெளிப்புற தோற்றத்தின் அடிப்படையில் தான் முதலில் மக்கள் நம்மை கணிக்கிறார்கள். அதை தாண்டி பழகும் போது மட்டுமே நம்முடைய குணம் அவர்கள் கண்ணுக்கு தெரியும். பொதுவாக வெளிப்புற தோற்றத்தில் மற்றவர்களை கவர்வதில் முக்கிய பங்கு வகிப்பது நம்முடைய சிரிப்பு தான். நமது சிரிப்பு அழகாக இருக்கும் பட்சத்தில், எளிதாக மற்றவர்களை கவர்ந்து அவர்களிடம் நல்ல நட்புறவுடன் பழகிக் கொள்ள முடியும். […]
