புகைபிடிப்பதில் அதிகம் இளம் வயதினரே பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் இவ்வாறான செயல்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள்…? புகைப் பழக்கம் ஆரம்பித்த புதிதில், புகையை இழுத்த 10 வினாடிகளில், புகையிலையில் முக்கியமாக உள்ள நிகோட்டின் எனப்படும் ரசாயனம் மூளையைச் சென்றடைந்து ரசாயன மாற்றங்களை ஏற்படுத்திவிடும். அமைதியாகவும் அதிகக் கவனத்துடன் இருப்பது போலவும் உணரச் செய்கிறது. நாளடைவில் மூளை, உடலில் இயற்கையாகவே உள்ள ரசாயனங்களுக்குப் பதிலளிக்காமல் நிகோட்டினுக்குப் பழக்கப்பட்டு புகைக்காக ஏங்கத் துவங்குகிறது. இந்த ஏக்கம், தலைவலி, கோபம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை […]
