கொடிமரம் அமைப்பதற்காக வழங்கிய தேக்கு மரம் 4 ஆண்டுகளாக வீணாக கிடப்பதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தோப்புத்துறையில் அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ராமாயணம் காலத்திற்கு முன்பே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள திருமாலை ராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன்பு வழிபட்டதாகவும், கோவிலின் முகப்பில் அவர் பெயரால் ஒரு தீர்த்தம் அமைத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 25 ஆம் ஆண்டு கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது கொடிமரம் […]
