உங்கள் சிவப்பு மை பேனாக்களால்,எங்கள் தலையெழுத்தை திருத்திய பிரம்மாக்களே! சொல் ஒலி கொண்டு எங்கள் உள் ஒளி செதுக்கிய நீங்கள் ஒவ்வொருவரும் சிற்பிகளே! ஆண்டுதோறும் எங்கள் அறிவுத்தாகம் மாற்றியதால் நீங்கள் அத்தனை பேரும் அருவிகளே! எங்களுக்கு தோன்றிய போதெல்லாம் உங்களை பிரட்டினோம் நாங்கள் பிரட்டிய போதெல்லாம் நீங்கள் பொருள் தந்தீர் ஆதலால் நீங்கள் அகராதிகள்! காலூந்தி மேலேற தோல் தந்ததால் நீங்கள் ஏணிகள்! நாங்கள் தடுக்கிய போதும், தடுமாறிய போதும் நேற்படுத்தினார்கள் எங்களை நெறிபடுத்தினீர்கள்! மனப்பாடம் […]
