புத்தகம் இல்லாமல் பாடம் நடத்த ஆசிரியர்கள் தயாரா என இந்திய தொழில் கூட்டமைப்பு விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வியெழுப்பியுள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் 125ஆவது ஆண்டு விழாவையொட்டி புதுச்சேரியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், ‘நவீனகால கற்பித்தலில் பரிமாணம், சவால்கள், வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். அப்போது, கல்வித்துறைச் செயலர் அன்பரசு தலைமையேற்று பேசுகையில், “புதுச்சேரி அரசுப் பள்ளிகளின் தரம் ஆண்டுதோறும் உயர்ந்துவருகிறது. கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு […]
