ஆசிரியரை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான அருள்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராணி அப்பகுதியில் இருக்கும் கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து ராணி குளித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு வாலிபர்கள் அங்கு சென்றுள்ளனர். அதில் ஒரு வாலிபர் கால்வாய்க்குள் […]
