இறுக்கமாக சீருடை அணிந்திருந்ததாக கூறி ஆசிரியர் மாணவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உதயா நகரில் கலாதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனான மிதுன் கணபதி சக்தி ரோட்டில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை வழங்கியுள்ளனர். இந்நிலையில் மிதுன் வீட்டிற்கு சென்று சீருடையை அணிந்து பார்த்த போது அது பெரிதாக இருந்துள்ளது. இதனால் சீருடையை தனது தாயாரிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து […]
