மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராமலிங்கபுரம் அம்பேத்கர் நகரில் நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கம் என்ற மகன் உள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு மாணிக்கம் சித்தப்பா முறை என கூறப்படுகிறது. […]
