கடலூரில் கடைகளுக்கான வாடகையை பலமடங்கு ஏற்றியதை கண்டித்து வியாபாரிகள் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடலூர் நகராட்சிக்கு சொந்தமாக மஞ்சக்குப்பம், முதுகூர், பான்பரி உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் சுமார் 650 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நியாயமான முறையில் மாதம்தோறும் வாடகை நகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென வியாபாரிகளுக்கு சுமையை ஏற்படுத்தும் விதமாக பல மடங்கு வரியை உயர்த்தி நகராட்சி அறிவித்தது. அந்த வரியை செலுத்தாதவர்களின் கடைகளை பூட்டி சீல் வைத்தது. அதிகப்படியான வாடகையால் நொந்த […]
