இன்றைய பஞ்சாங்கம் 23-02-2022, மாசி 11, புதன்கிழமை, சப்தமி திதி மாலை 04.57 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. விசாகம் நட்சத்திரம் பகல் 02.40 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. பைரவர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இன்றைய ராசிப்பலன் – 23.02.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 08.56 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தாமதங்கள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். […]