இன்றைய பஞ்சாங்கம் 10-02-2021, தை 28, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.09 வரை பின்பு அமாவாசை. உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.12 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் பகல் 02.12 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இன்றைய ராசிப்பலன் – 10.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். ரிஷபம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். […]