தஞ்சை பெரிய கோவிலை ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு குடமுழுக்கு திருவிழா நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளில் இந்து சமய அறநிலை துறை ஈடுபட்டுள்ளது. கோவில் பிரகாரத்தில் நடைபாதையை […]
