ஒரு தடவை முல்லா ஒரு திருமணத்துக்குச் சென்றார் இரண்டொரு தடவை அவர் திருமணத்துக்கு சென்றுதிரும்பிவந்து பார்த்தபோது அவருடைய செருப்பு காணாமல்போய் விட்டது. அதனால் அன்று செருப்பை வெளியே விட்டுச் செல்ல முல்லாவுக்கு மனம் வரவில்லை. அந்தக் காலத்தில் செருப்பணிந்த காலுடன் வீட்டுக்குள் நடமாடக் கூடாது. செருப்புகளை இழக்க விரும்பாத முல்லா அவற்றைக் கழற்றி ஒரு துணியில் சுற்றிக் கையில் வைத்துக் கொண்டார். முல்லாவின் கையில் ஏதோ காகிதப் பொட்டலம் இருப்பதைக் கண்ட திருமண விட்டுக்காரர், “முல்லா அவர்களே ஏதோ காகிதப் பொட்டலத்தை வைத்திருக்கிறீரே, அதில் என்ன இருக்கிறது? மணமகனுக்கு அளிக்கப்பட வேண்டிய பரிசா? என்று கேட்டார். அது மிகவும் புனிதமான ஒரு வேதாந்த நூல் என்று முல்லா பதிலளித்தார். […]
