பழுதாகி இருந்த ரிக் இயந்திரம் 30 நிமிடத்திற்கு பின் மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளது. மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 53 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 88 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் 2 மீட்டரில் 1 மீட்டர் விட்டம் அளவில் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அதன் வழியாக 3 தீயணைப்பு வீரர்களை அனுப்பி குழந்தையை மீட்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. […]
