Categories
மாவட்ட செய்திகள்

10 மாவட்ட மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி – முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை: காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10 மாவட்ட மாணவ – மாணவியருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விலையில்லா மிதிவண்டிகளை திங்கட்கிழமை வழங்குகிறார். பள்ளிகளுக்கு நீண்டதூரம் செல்லும் மாணவ – மாணவியரின் சிரமத்தைத் தவிர்க்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுவருகிறது. டிசம்பர் 23ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை… கோரிக்கை விடுத்தார் எடப்பாடி….. கோரிக்கை நிறைவேறுமா…??

மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், பழனிச்சாமி இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா  தெளிவான விளக்கம் அளித்து விட்டனர். அப்படியிருக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல்.. அதிகரித்த டீசல் வாகன ஓட்டிகள் கவலை…!!

பெட்ரோல் விலை மாற்றமின்றியும், டீசல் விலை உயர்ந்தும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள்

பேசவோ, எழுதவோ கூடாது! – மாநிலத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி… ஒலிபெருக்கிகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும், தேர்தல் நடத்தை விதிகளைக் கடைப்பிடித்து பயன்படுத்த வேண்டும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

32 குளங்கள் எங்கே? – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: 32 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய திருத்துறைப்பூண்டி வட்டாட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 32 குளங்கள் உள்ளன. இந்தக் குளங்கள் திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்குள்பட்ட நெடும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக விளங்கிவருவதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் செய்வதற்கும் பயன்பட்டுவருகிறது. இந்நிலையில், நிலத்தடி நீரின் அரணாக விளங்கும் இக்குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி மாற்றதால் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு…

திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள்  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதனால் வாக்குச்சாவடியை மறு சீரமைவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   காயாமொழியில் ஏழாவது வார்டு வாக்குச்சாவடி    ஐந்தாவது வார்டிற்கும் ஐந்தாவது வார்டு வாக்குச்சாவடி ஏழாவது வார்டிற்கும் மற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து  வாக்குச்சாவடிகளை மாற்றி அமைக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள்  கூறியுள்ளனர்.    

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல்… அதிகரித்த டீசல் வாகன ஓட்டிகள் கவலை…!!

பெட்ரோல் விலை மாற்றமின்றியும், டீசல் விலை உயர்ந்தும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வெறிநாய் அட்டகாசம்” குழந்தை…பெண்கள்… உட்பட 16 பேர் படுகாயம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெறிநாய் கடித்து குதறியதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டம் ராயபுரத்தில் நாயொன்று வெறிபிடித்து திடீரென அப்பகுதியில் உள்ள பலரைக் கடித்து துரத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து ஓடியுள்ளனர். பின்னர் அங்கிருந்து திருமயம் நெடுஞ்சாலை வழியாக சுமார் ஏழு மீட்டர் தூரம் வரை பார்க்கும் எல்லோரையும் அந்த நாய் துரத்தி கடித்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 16 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் ராயபுரம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி கோவில் உண்டியல் பணம் திருட்டு….. மூதாட்டி உட்பட 3 பேர் கைது…..!!

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் பொழுது பணம் மற்றும் நகையை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  திருத்தணி கோவில் இணை ஆணையர் பழனி குமார் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தற்காலிக ஊழியர்கள் மற்றும் ஆன்மிக சேவையில் ஈடுபடுவோர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் சூரிய பிரபை என்ற மூதாட்டி உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பொழுது ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 16 கிராம் தங்கத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற வாலிபர் கைது…..!!

மதுரை விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். இலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ராபின் ராபர்ட் என்பவர் கடந்த 1983ம் ஆண்டில் இராமநாதபுரத்தில் அகதிகள் முகாமில் தங்கியிருந்த பொழுது தமிழகத்தைச் சேர்ந்த கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள முகவரி கொண்டு ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார். அதனை பயன்படுத்தி இலங்கை செல்ல முயன்ற அவரை அவர் பேசும் […]

Categories
புதுச்சேரி பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் …!!

புதுச்சேரியில் கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் இருந்து இளம்பெண் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் . பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்,செல்வி தம்பதியருக்கு 8மாத குழந்தை இருக்கும் நிலையில் புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார் செல்வி .திருப்பூரில் பணிபுரிந்து வரும் சரவணனுடன் 17ஆம் தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு செல்போனில் பேசிக்கொண்டிருந்த செல்வி தனது கவனக்குறைவால் அங்கிருந்து கீழே விழுந்து இறந்ததாக  கூறப்படுகிறது .மொட்டைமாடியில் சுற்றுச்சுவர் குறைவான உயரத்தில் இருந்ததால் செல்வி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஹைட்ரோகார்பன் தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி……. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு….!!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடக்கு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடக்கு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தடை விதிக்க கோரி கடந்த 2010ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இப்பகுதியில் ஹைட்ரோகார்பன் தொடர்பாக எந்த பணியும் தொடங்கவில்லை என்றும், உரிய அனுமதி பெற்ற பின்னரே பணிகள் தொடங்கப்படும் […]

Categories
ஈரோடு சென்னை மாவட்ட செய்திகள்

நித்தியிடமிருந்து மகனை காப்பாற்றுங்கள்……. தாய் புகார்….. 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு….!!

நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்ட பிராமண சாமி என்பவர் குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் நித்தியானந்தா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த குமார் என்பவரின் ஆட்கொணர்வு மனு கடந்த 2003 ஆம் ஆண்டு தனது மகன் பல் மருத்துவர் முருகானந்தம் பிடதி ஆசிரமத்தில் சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அசரமத்தில் அவருக்கு பிராண சாமி என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. சீடர்கள் மீது ஆசிரமத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மகனை சந்திக்கச் சென்றபோது […]

Categories
மாநில செய்திகள்

10th, +1,+2 வினாத்தாள் வெளியானது உண்மையாம்….. அதிர்ச்சியில் பள்ளி கல்விதுறை…!!

பத்து பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பு அரையாண்டு வினாத்தாள் சமூக வலைதளங்களில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. பத்தாம் வகுப்புக்கு கடந்த 13ஆம் தேதியும் 11 மற்றும்  12ம் வகுப்புகளுக்கு கடந்த 13ம் தேதியும் தொடங்கிய அரையாண்டு தேர்வுகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்நிலையில் ஹலோ என்னும் செயலியல் அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இன்று நடைபெறும் பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் நேற்றைய தினமும் 12 ஆம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மாற்று பாதை” ஐயப்பன் பக்தர்களுக்கு தேனி போலீஸ் முக்கிய அறிவிப்பு….!!

தேனி மார்க்கமாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பன் பக்தர்கள் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக கம்பத்திலிருந்து மாற்றுப்பாதையில் செல்ல திருப்பி விடப்பட்டுள்ளன. கேரள மாநிலத்திலுள்ள சபரிமலைக்கு தேனி கம்பம் குமுளி வழியாக ஐயப்ப பக்தர்கள் செல்வதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதன் காரணமாக கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் கம்பத்தில் முன்பாக  திருப்பி விடப்பட்டு கம்பம் வழியாக மேலப்பாளையம் கூடகோயில் சபரிமலைக்கு செல்கின்றன. அதேபோல் சபரி மலையில் இருந்து தமிழகத்திற்கு திரும்பும் வாகனங்கள் குட்டிகணம், பெரியாறு, குமுளி மற்றும் கம்பம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“செங்கல்சூளை கொத்தடிமைகள்” 8 குழந்தைகள் உட்பட 19 பேர் ஈரோட்டில் மீட்பு…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த எட்டு குழந்தைகள் உட்பட 19 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே முனியப்பன் பகுதியில் செயல்பட்டுவரும் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் விரைந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த கடலூர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“குப்பை கொட்டாதீர்” அரிசி மாவு மூலம் துப்பரவு பணியாளர்கள் விழிப்புணர்வு…… குவியும் பாராட்டு….!!

கடலூரில் குப்பை கொட்டுவதை தவிர்க்க அரிசி மாவு கொண்டு துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய  சம்பவம் அப்பகுதி மக்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் குப்பைகளை அகற்ற நகராட்சி பணியாளர்கள் அப்பகுதியில் அரிசிமாவு கொண்டு குப்பை கொட்டாதீர்கள் என்று புதுமையான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். மேல வீதியில் அமைந்துள்ள இந்த பள்ளியின் வளாகத்தில் மார்க்கெட் வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் பழ  கழிவுகளை கொட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. அதை உண்ணுவதற்கு மாடுகள் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

JUST IN : அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு ….!!

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளக்காக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிறிஸ்துமஸ் , உள்ளாட்சி தேர்தல் , புத்தாண்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாளை முதல் ஜனவரி 1_ஆம் தேதி வரை என 12 நாட்களுக்கு விடுமுறை என உயர்கல்வித்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படக்கூடிய கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த விடுமுறை நாட்களில் பட்டியலிடப்பட்டு இருந்த அட்டவணை படுத்தப்பட்டு இருந்த  தேர்வுகள் அனைத்தும் ஒத்தி […]

Categories
கல்வி பல்சுவை

மாணவர்களே…!.. ”நாளை முதல் யாரும் வராதீங்க”….. 12 நாட்களை கொண்டாடுங்க …!!

தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்கள் மத்திய , மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தால் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பருவத் தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணிக்காகவும் கல்லூரிகளுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் ஏலத்தில் கவனம் ஈர்த்த தமிழ்நாட்டு வீரர்கள்..!!

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 12ஆவது ஐபிஎல் சீசன், ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 13-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் மூன்று பேர் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். வீரர்களின் விவரம்: கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழ்நாடு சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை, இந்த முறை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : ”நாளை முதல் ஜன 1 வரை…. 12 நாள் விடுமுறை…. மகிழ்ச்சியில் மாணவர்கள் …!!

தமிழகத்தில் உள்ள கல்லூரி மற்றும்  பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை 25_ஆம் தேதியும் , புத்தாண்டு 1-ஆம் தேதியும் நடைபெறுகின்றது.மேலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை  முதல் விடுமுறை என்று உயர்கல்வித்துறை  அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக  போராட்டம் நடந்து வரும் நிலையில் தமிழக அரசு விடுமுறை நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் ஜனவரி 1_ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர்களே..!… எல்லாரும் வாங்க….. மக்களை காப்பாத்துங்க…… ஸ்டாலின் தீடிர் அழைப்பு …!!

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து திமுக நடத்தும் பேரணியில் நடிகர்களை பங்கேற்க முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி திமுக பேரணி நடத்த இருக்கின்றது. இதற்காக கூட்டணி கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பேரணியில் பங்கேற்க நடிகர்களுக்கு திமுக சார்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் புகுந்த 5 அடி பாம்பு……. லாவகமாக பிடித்த தீயணைப்பு துறை….!!

ஈரோடு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் புகுந்த  மண்ணுளிப்பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் காவல்துறையினர் கண்காணிப்பாளர்  அலுவலக வளாகத்தில் நகாவல்துறையினர் மோப்பநாய் பிரிவு பகுதிகளில் இருந்து வெளியேறிய 5 அடி நீளம் கொண்ட மண்ணுள்ளிபாம்பு அனைத்து மகளிர் காவல்நிலையம் நோக்கி சென்றது. இதனைக்கண்ட காவலர்கள் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். பின் தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Categories
மாநில செய்திகள்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியரைச் சந்தித்த கடம்பூர் ராஜூ!

சோ. தர்மன் எழுதியுள்ள ‘சூல்’ நாவலின் மையக் கருத்தான குடிமராமத்துப் பணிகளை, தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தியுள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டு எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘சூல்’ நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள உருளைக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ. தருமனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை தெருவோர கடைகளை இடம்மாற்ற நடவடிக்கை…… சென்னை மாநகராட்சி உத்தரவு….!!

சென்னையில் தெருவோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்த மண்டல அளவில் ஒருங்கிணைப்பு குழுக்களை அமைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி இணை ஆணையர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில்  தெருவோர வியாபாரிகள் எண்ணிக்கையை கணக்கிடுவது, அதன் அடிப்படையில் விற்பனை மண்டலங்கள் அமைப்பது தொடர்பாகவும், தெருவோர வியாபாரிகள் இடமாற்றம் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. இதையடுத்து  ஒவ்வொரு பகுதியிலும் தெருவோர விற்பனை மண்டலங்களை கண்டறிந்து தெருவோர வியாபாரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பரிசு ரூ 1000 கிடையாது….. தடை கேட்டு வழக்கு …..!!

பொங்கலுக்கு 1000 வழங்குவதற்கு தடைகேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக தமிழக அரசு அனைவருக்கும் கரும்பு தூண்டு , அரிசி , பருப்பு , பணம் ரூ  1000 வழக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் , திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அலமேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் பொங்கலுக்கு அரசு வழங்கும் 1000 ரூபாய் பரிசு பெட்டகத்தை தேர்தல் முடியும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மறுமணம்” பெண்கொடுக்க மறுப்பு…… முற்றிய மோதல்….. மாறி மாறி வெட்டு…… 5 பேர் படுகாயம்…!!

சென்னை ராணிப்பேட்டை பகுதியை வாலாஜாவில் குடும்ப தகராறு காரணமாக உறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. சென்னையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி இறந்த நிலையில் அவரக்கு  மறுமண ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. ஆனால் செல்வத்தின் உறவினர் காத்தவராயன் என்பவர் திருமணத்திற்கு இடையூறு செய்து பெண் கொடுக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பகை முற்றிய நிலையில் வாலாஜாபேட்டை வந்திருந்த செல்வத்தையும் அவரது தாயாரையும் காத்தவராயன் உள்ளிட்ட 3 பேர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ25,00,000….. போலி மதுபாட்டில்களுக்கு வீட்டோடு சீல்….. 2 பேர் கைது….. புதுச்சேரி போலீஸ் அதிரடி…!!

புதுச்சேரி யூனியன் காரைக்காலில் வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல் துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். புதுச்சேரி யூனியன்  காரைக்கால் புறவழிச்சாலை பின்ஸ்கேர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியர்க்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் 25 லட்சம் மதிப்புள்ள மது […]

Categories
மாநில செய்திகள் வானிலை

DEC-23 வரை….. கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை தகவல் தொடர்பாக சென்னையில் உள்ள மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கன மழை கொட்டி தீர்க்கும் என்பதை மஞ்சள் வண்ணத்தில் குறிப்பிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக ராமநாதபுரம் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறி இருக்கிறது. சென்னை மாநகரைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி மெரினால இவங்க கடை நடத்த அனுமதி இல்லை….. சென்னை நீதிமன்றம் எச்சரிக்கை….!!

மெரினாவில் கடை வைத்துள்ளவர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்தும், கோடிக்கணக்கான செலவில் பல நலத்திட்டங்கள் செய்யவும்  சென்னை நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.  சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினித் சுரேஷ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சென்னை மெரினா கடற்கரையில் தற்போது வரை 1962 கடைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FAKE ID…… “நான் போலீஸ்” கமிஷனர் ஆஃபிஸில் தில்லா நுழைந்த நபர்…… சோதனையில் சிக்கி கைது…!!

போலீஸ் என கூறிக்கொண்டு போலி அடையாள அட்டையை காட்டி சென்னை காவல் ஆணையரை சந்திக்கச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.  லேடி வில்லிங்டன் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்க காவல் ஆணையரை அழைப்பதற்காக ஜான் ஜெபராஜ் என்பவர் அக்கல்லூரி முதல்வர் உடன் சென்றிருந்தார். அப்பொழுது தான் சாலை பாதுகாப்பு காவல்துறை அதிகாரி என்று கூறி  அடையாள அட்டையை காண்பித்து உள்ளே சென்றார். பின் காவல் ஆணையரின் பார்வையாளர் அறையில் அமர்ந்திருந்த அவரிடம் சோதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

24 வாரம் சிறப்பு பயிற்சி….. 407 உபி காவலர்களுக்கு…… சென்னையில் சத்திய பிராமண விழா…!!

சென்னையை ஆவடி பகுதியில்  உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு சத்தியப்பிரமாண விழா நடைபெற்றது. சென்னையை  அடுத்த ஆவடி  பகுதியில் உள்ள  மத்திய ரிசெர்வ் காவல்படை பயிற்சி முகாமில்  டிஜிபி பிரவீன் தலைமையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 407 காவலர்களுக்கு 24 வாரங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.  இந்த பயிற்சியில் நவீன ஆயுதங்களை கையாளுதல் துப்பாக்கி சுடுதல் உடற்பயிற்சி போன்ற பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சி முகாம் நிறைவு பெற்ற நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

#JUSTNOW: தமிழகத்தில் தமிழகர்களுக்கே வேலை….. சென்னை சென்ட்ரலில் போராட்டம் …!!

தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என வலியுறுத்தி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகின்றது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முகப்பு பகுதியில் உள்ள நுழைவாயில் வளாகத்தில் தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என வலியுறுத்தி மனித சங்கிலி தமிழ் தேசிய பேரியக்கம் போராட்டத்தை நடத்தி வருகின்றது. தமிழர்களின் வேலை தமிழருக்கே என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில் 200க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமிழகத்த்தில் உள்ள வேளைகளில் அதிகளவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு!

நகை, பணத்திற்காக பெண்ணைக் கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை லிங்கப்பன் தெருவில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்தவர் கதிஜா. இவருக்கு முகமது அப்பாஸ் என்ற மகன் உள்ளார். கதிஜாவின் வீட்டில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் சயது இப்ராஹிம். இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சயது இப்ராஹிம் அவரது நண்பர் வேலு, பரணிதரன் ஆகிய […]

Categories
வானிலை

தென் தமிழகத்தில் கன மழை… வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

இன்று சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது . ராமநாதபுரம்,திருநெல்வேலி,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கிழக்கு திசை காற்றின் தாக்கம், வெப்பச்சலனம் காரணத்தால்,லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்வதற்கு  வாய்ப்புள்ளது என்றும், தென் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் தூத்துக்குடி,ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் சில  இடங்களில் கன மழை பெய்ய  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

‘குழந்தைப் பாக்கியம் வேணுமா… நாங்க இருக்கோம்’ – நூதன மோசடியில் போலி மருத்துவர்!

பாவூர்சத்திரத்தில் குழந்தைப் பாக்கியம் தருவதாகக் கூறி, கிராம மக்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த போலி மருத்துவர் சீனிவாசன், தினேஷ், கோகுல் ஆகியோர் சொகுசு காரில் வந்து, ‘ குழந்தை இல்லாத தம்பதியர்களிடம் குழந்தை பாக்கியம் கிடைக்க, நாங்கள் மருந்து மாத்திரைகள் தருவதாக’ ஆசை வார்த்தையில் பேசி மயக்கியுள்ளனர். இதை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

”நகையை பறித்த கொள்ளையன்” கத்திய குளோரியம்மாள்….. தூத்துக்குடியில் பரபரப்பு ….!!

கடைவீதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 19 பவுன் தாலிச் செயினை பறித்த கொள்ளையனை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மட்டக்கடை தெற்கு நாடார் தெருவைச் சேர்ந்தவர் தர்மர். இவரது மனைவி குளோரியம்மாள் (75). நேற்று அப்பகுதியிலுள்ள கடைக்கு குளோரியம்மாள் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், குளோரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 19 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றார். அதிர்ச்சியில் குளோரியம்மாள் கூச்சலிடவே, அப்பகுதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திக்…. திக்….. அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல கூலிப்படை …..!!

தேர்தல் முன் விரோதம் காரணமாக அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல முயன்ற கூலிப்படையினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (47). இவர் அதிமுக ராமநாதபுரம் ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் முன்னாள் ஒன்றியச் செயலராக இருந்தவருக்கும் கட்சி பதவி, குடும்ப பிரச்னை போன்றவற்றால் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அசோக்குமார் சக்கரைக் கோட்டையில் 9ஆவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல்… அதிகரித்த டீசல்… வாகன ஓட்டிகள் கவலை…!!

பெட்ரோல் விலை மாற்றமின்றியும் , டீசல் விலை உயர்ந்தும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

SBI நகை மதிப்பீட்டாளருக்கான தொகை நிர்ணய அறிவிப்பிற்கு தடை!

மதுரை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்ட நகை மதிப்பீட்டாளருக்கான தொகையை நிர்ணயித்து வெளியிட்ட அறிவிப்பானையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் சங்கத்தின் சார்பில் நாகர்கோவில் சடகுட்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். மனுவில், “ தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கியில் உள்ள நகை மதிப்பீட்டாளர் சங்கத்தில் 54 பேர் […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு வாபஸ் பெற அவகாசம் நிறைவு..!!

 ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வாபஸ் பெற அவகாசம் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த 9-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் உட்பட  பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 27 மாவட்டங்களில் மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

“‘சூல்’ நாவலுக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி”.. சோ. தர்மனுக்கு டிடிவி தினகரன் பாராட்டு..!!

எழுத்தாளர் திரு.சோ.தர்மனுக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சோ. தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். எழுத்தாளரான இவருக்கு தமிழில் சிறந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு நூல்களை […]

Categories
மாநில செய்திகள்

தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…ஒருவர் கைது.!!

தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்திற்கு அடையாளம் தெரியாத நபரால் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் எதிரொலியாக, இன்று ப்லோரா என்ற மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்குள் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் உரிய சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. முதலமைச்சர், துணை முதலமைச்சர் இல்லங்கள், தலைமைச் செயலகம் போன்ற முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த […]

Categories
மாநில செய்திகள்

“இனிமேல் பார்க்க வேண்டாம்”…..மாணவிகளுக்கு அட்வைஸ்…..ஏடிஜிபி ரவி..!!

செல்போன் நம்பரை மட்டும் கேட்கும் வகையில் காவலன் செயலி மாற்றி அமைக்கப்படும் என்று ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி அறிமுக விழாவில் ஏடிஜிபி ரவி மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், உலகிலேயே பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளன. குழந்தைகளை ஆபாச படம் தொடர்பாக  30 பேர் பட்டியல் சென்னை காவல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.மாணவிகள் சிலர் குழந்தைகள் ஆபாச படம் பார்த்ததாக கூறி என்னிடம் வந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

62வயது……முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை…..கரூர் மகிளா கோர்ட் அதிரடி..!!

சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வயதான முதியவர் ஒருவர், பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட காரணத்தினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கரூர் மாவட்டம் சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணிடம், அப்பகுதியைச் சேர்ந்த முதியவரான கிட்டான் (62) , கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
மாநில செய்திகள்

மாஸாக என்ட்ரி ஆகப்போகும்……ஜல்லிக்கட்டு ஜாம்பவான்கள்…..பட்டய கிளப்பும் பொங்கல் …!!

பொங்கல் விழா வருவதால் காளைகள்  ஜல்லிக்கட்டுக்காக தயாராகி வருகின்றது. தைப்பொங்கல் வந்தாலே மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சந்தோசம் பொங்கும். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் பங்குபெற்று பரிசுகளை பெறுவதற்காக காளைகளும் மாடு பிடி வீரர்களும்  பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுரைக்கு பக்கத்திலுள்ள மாடக்குளத்தில் உள்ள அனைவருமே ஜல்லிக்கட்டுக்காக தீவிரமாக உருவாகி வருகிறார்கள் . 50க்கும் மேல் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அதிகாலை முதல் காளைகளை ஜல்லிக்கட்டுக்காக தயார்படுத்தி […]

Categories
பல்சுவை

உயர்ந்த டீசல்.. மாற்றமின்றி பெட்ரோல் வாகன ஓட்டிகள் கவலை…!!

பெட்ரோல் விலை மாற்றமின்றியும் , டீசல் விலை உயர்ந்தும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஏன் குடிச்சிட்டு வந்த … இரவு முழுவதும் பிணத்துடன் உறங்கிய மகன் …!!

குடிப்பழக்கத்தை கண்டித்த பெரியப்பாவை கட்டையால் அடித்துக் கொலை செய்து இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தேனியில் ,சமதர்ம புரத்தைச் சேர்ந்த கனகவேல் ஐயப்பன் என்ற அந்த இளைஞர் நேற்று இரவு  குடிபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அவரது பெரியப்பா பெத்தணசாமி கண்டித்துள்ளார்.இதனால்  ஆத்திரமடைந்த கனகவேல் ஐயப்பன் உருட்டு கட்டையை எடுத்து பெத்தணசாமியின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில் பெத்தணசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .அவர் உயிரிழந்ததைக்  கூட தெரியாமல் இரவு முழுவதும் அவர்  உடலுக்கு பக்கத்திலேயே […]

Categories
வானிலை

20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு …வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் வருகிற 20 ஆம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்த வானிலை ஆய்வு  மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 3 செ.மீட்டரும், பாம்பன் தொண்டியில் 1 செ.மீட்டர் மழையும்  பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வருகிற 20 ஆம் தேதி அன்று கனமழை […]

Categories
மாநில செய்திகள்

பெண்களின் பாதுகாப்பிற்கு …புதிய வசதி …!!

 பெண்கள்  மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக மேலும் புதிய வசதிகளை  காவல்துறை வெளியிட்டுள்ளது. பெண்களின்  பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் மாநகர காவல்துறை ஏற்கனவே 35 மகளிர் காவல் நிலையத்திற்கு  அம்மா ரோந்து வாகனங்கள் கொடுத்து  ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், காவலன் என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து , பெண்கள்  மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத  நிலை  என்று நினைத்தால் 7530001100 என்ற வாட்ஸ் அப் நம்பர் , மற்றும் www.facbook.com/chennai.police என்ற முகநூல் பக்கத்திலும், [email protected] என்ற மின்னஞ்சல் […]

Categories

Tech |