Categories
Uncategorized மாநில செய்திகள்

இறுதி கட்டத்தில் குடிமராமத்து பணிகள் – ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு!

வரும் 12ம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி இதன் மூலம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கமாக உள்ளது. மேட்டூர் அணையை பொறுத்தவரை போதிய […]

Categories
மாநில செய்திகள்

விலையில்லா பொருட்கள் வழங்க ஜூன் 5ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் – தமிழக அரசு சுற்றறிக்கை!

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் ஜூன் மாதத்திற்கும் இலவச பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் ஜூன் மாதத்திற்கு ரேஷன் பொருட்கள் தருவது தொடர்பாக தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்க ஏதுவாக ஜூன் 5ம் தேதி முதல் ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

விமான சேவை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழக அரசு வெளியீடு!

விமான சேவை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாளை (25-05-2020) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். அதன்படி நாளை முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நாளை முதல் சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!

சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தந்த மாநில அரசுகள் சிவப்பு மண்டலங்களை சில நிபந்தனைகள் விதித்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மதுக்கடைகள், சலூன்கள் திறக்கலாம் என்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 […]

Categories
மாநில செய்திகள்

மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று டெலிவரி செய்ய முடியுமா? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. இதையடுத்து மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் கொரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 347.76 கோடி கிடைத்துள்ளது – தமிழக அரசு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி கிடைத்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள்என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிக்கு தற்போது பெறப்பட்ட மொத்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் நிபந்தனைகளுடன் நாளை முதல் கட்டுமானப் பணிகள் தொடங்க அனுமதி!

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் கட்டுமானப் பணிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கில் தமிழக சில தளர்வுகள் அளித்துள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் நாளை முதல் கட்டுமானப் பணிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முக கவசம் , சமூக விலகலை பின்பற்றி கட்டுமான பணிகளை தொடங்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்த பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306.42 கோடி கிடைத்துள்ளது – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306.42 கோடி கிடைத்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள்என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிக்கு தற்போது பெறப்பட்ட மொத்த […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணி முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.160.93 கோடி வந்துள்ளது – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தடுப்பு பணி முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.160.93 கோடி வந்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள்என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிக்கு தற்போது பெறப்பட்ட மொத்தத் தொகை […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை – முதலமைச்சர் பழனிசாமி தகவல்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? இல்லையா? என மாணவர்கள் குழம்பி வரும் நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் அனைவரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீரில் மூழ்கிய மகள்… காப்பாற்ற முயன்ற அம்மா… 3 பேர் மரணம்… சோகத்தில் கிராமம்.!!

சங்கரன் கோவிலில் நீரில் மூழ்கி மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அழகு பொன்னையா என்பவரின் மனைவி இந்திரா மற்றும் மகள் சுமித்ரா வீட்டின் அருகே உள்ள குளத்தில் துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது தன்னுடைய மகள் சுமித்ரா  நீச்சல் தெரியாமல் மூழ்கியுள்ளார். அதை பார்த்த இந்திரா  நீரில் மூழ்கியுள்ள மகளை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் இந்திராவுக்கும் நீச்சல் தெரியாததால் அவரும் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அங்கு […]

Categories

Tech |