Categories
மாநில செய்திகள்

மத்திய சுகாதாரத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் பெற்றதாக எத்தனை மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? என பதிலளிக்கும்படி, மத்திய சுகாதாரத் துறைக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மருத்துவர்களுக்குப் பரிசு வழங்கியது உள்ளிட்ட விற்பனை மேம்பாட்டுச் செலவினங்களை தங்கள் வருமானத்தில் இருந்து தள்ளுபடி செய்யக் கோரி, தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை சார்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீ… சீ…. என்ன ? இது….. ஆளுநர் உரையை கிண்டல் செய்த ஸ்டாலின் ….!!

ஆளுநரின் உரை , பய அறிக்கையாக ( Statement of Fear) மட்டுமே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்: நல்லாட்சி குறியீட்டில் முதலிடம் என சொல்லும் தமிழ்நாடு அரசு, குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளாமலேயே சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குகிறது என எப்படி சொல்லலாம். 250க்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன ? காரியம் பண்ணி இருக்கீங்க …. சஸ்பெண்ட் செய்யப்பட்ட குருக்கள் ….!!

 ராமநாதசுவாமி கோயில் கருவறையைப் படம் எடுத்து வெளியிட்ட குருக்களை கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கருவறையில் உள்ள மூலவரை யாரும் படம் எடுக்கக்கூடாது என்று விதிமுறைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மூலவரான சிவலிங்கத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்தப் படத்தை வட மாநில பக்தருக்காக குருக்கள் ஒருவர் செல்போன் மூலம் படம் பிடித்து பெரும் தொகைக்கு விற்றதாக குற்றம்சாட்டி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

”அனுமதி கொடுங்க யூவர் ஆனர்” கரூரில் காத்துக்கிடக்கும் சேவல்கள் ….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடக்கவுள்ள சேவல் சண்டையில் பங்கேற்க, சேவலுக்குத் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர் போல் சேவல் சண்டைக்கு, கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சியிலுள்ள பூலாம் வலசு கிராம் பெயர் பெற்றது. பூலாம் வலசில் சில ஆண்டுகளாக சேவல் சண்டை நடைபெறாத நிலையில், 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் பல்வேறு நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடைபெற்றது. இச்சூழலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இம்மாவட்டத்தில் நடக்கவுள்ள சேவல் சண்டையில் கலந்து கொள்வதற்காக, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

BREAKING : குமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை

கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு செக்போஸ்டில் காவலுக்கு இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதில் சம்பவ இடத்திலேயே வில்சன் உயிரிழந்தார். வில்சனை சுட்டுக்கொன்றுவிட்டு ஸ்கார்பியோ காரில் தப்பியோடிய நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எம்.சி. ராஜா மாணவர் விடுதி விவகாரம்: வார்டன் விளக்கமளிக்க உத்தரவு

சைதாப்பேட்டை எம்.சி. ராஜா மாணவர் விடுதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்காதது தொடர்பாக ஜனவரி 20ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளருக்கும், விடுதி வார்டனுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளைச் சுகாதாரமாக பராமரிக்க உத்தரவிடக்கோரி விழுப்புரம் மாவட்டம், வானூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “சென்னை சைதாப்பேட்டையிலுள்ள எம்.சி. ராஜா மாணவர் விடுதியில் அடிப்படை வசதியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MPஆ இருந்தா என்ன ? தலைமை தாங்குவீங்களா ? கைது செய்து மாஸ் காட்டிய காவல்துறை ….!!

மத்திய அரசைக் கண்டித்து சி.ஐ.டி.யு, எ.ஐ.டி யு.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய இரண்டு மக்களவை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்தும் வேலையில்லா திண்டாடத்தைக் கண்டித்தும் சி.ஐ.டி.யு, எ.ஐ.டியு.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் உங்களின் எதிரி அல்ல ….. ஜன.25இல் முதல்வரின் முக்கிய சந்திப்பு …!!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை முதலமைச்சர் பழனிசாமி ஜன. 25ஆம் தேதி சந்தித்துப் பேசவுள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குப் பெரும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. இந்தச் சட்டத்தில் இஸ்லாமிய மக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாட்டிலும் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் எதிரொலித்தது. இந்நிலையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை […]

Categories
மாநில செய்திகள்

என்ன விட்டுருங்க…. நான் அப்படி பேசல ….. நெல்லை கண்ணன் மனு …!!

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நெல்லை கண்ணன் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசிய குற்றத்திற்காக கைது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அத பத்தி பேசிவீங்களா ? எதிர்க்க திராணி இருக்கா ? துரைமுருகன் காட்டம் …!!

 மத்திய அரசு கொண்டுவரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்த்து பேசத் தயராக உள்ளதா? என்று கூறுங்கள் உங்களை நம்புகிறோம் என்று துரைமுருகன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விமர்சித்து பேசினார். நேற்றைய சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எம்எல்ஏ செம்மலை, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் இடையே நடந்த உரையாடல். செம்மலை: குடியுரிமை விவகாரத்தில் இலங்கைத் தமிழர்கள் மீது மிகுந்த அக்கரையோடு திமுகவினர் பேசுகிறீர்கள். 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

11, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் கண்டிப்பாக நடத்தப்படவேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள் ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை பொதுத்தேர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிச்சயம் தாமரை மலரும்…. ”யாராலும் தடுக்க முடியாது”….. வானதி சீனிவாசன்

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தாமரை மலர்ந்துள்ளது என்றும், தமிழ்நாட்டில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் அதனை தொடர்ந்து எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில், இதனை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பாஜக கட்சியினர் ஆதரவுப் பேரணியை நடத்தி வருகின்றனர். தற்போது ஈரோடு, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, சேலம் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதைப் பற்றி பேசாதீங்க… யாருக்கும் அஞ்சமாட்டோம்…. சட்டப்பேரவையில் காரசார விவாதம்.!!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் மூன்றாவது நாளான இன்றும் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவை நிகழ்வில், ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சிச் தலைவர் ஸ்டாலின்: ஆளுநர் உரை, அரசின் செய்தி அறிக்கைபோல் அமைந்துள்ளது . Railway guide போல் உள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தேடித்தேடிப் பார்த்தேன் எதுவும் இல்லை என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர்: […]

Categories
மாநில செய்திகள்

வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடிய வருமான வரித்துறை அலுவலகம்..!!

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால், சென்னை வருமான வரித்துறை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு அலுவலங்களில் உள்ள 6 லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடெங்கும் மத்திய அரசைக் கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

நாடு தழுவிய வேலை நிறுத்தம் – மாணவர் அமைப்புகள் சாலை மறியல்!

இன்று நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறும் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அண்ணா சாலை சிம்சனில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாணவரணி, திராவிடர் கழக மாணவரணி, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவர்களைக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல்!!

தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு சட்ட பேரவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின் படி கூட்டுறவு சங்கத்தலைவர் உறுப்பினர் தவறு செய்தால் மாவட்ட இணைப்பதிவாளரே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஏழாம் நாள் திருவிழா…!!

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு ஏழாம் திருவிழாவான இன்று சாமி கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பல முக்கிய விழாக்களில் ஒன்றான மார்கழி மாத தேர் திருவிழாவானது பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.அந்தவகையில் இந்தாண்டிற்கான மார்கழி மாத தேர் திருவிழாவானது ஜனவரி ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாளான நேற்று தாணுமாலய […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

கவுன்சிலரைக் காணோம் கண்டுபிடிச்சுத் தாங்க!’ – பொதுமக்கள் புகார்

பெரியகுளம் 8ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், துணை முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 10 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 7, பாஜக 1, திமுக 2 உறுப்பினர்களைப் பெற்றது. இதன்மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக சுலபமாகப் பெற்றது. ஆனால், ஒன்றிய அளவில் ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய மூன்று ஒன்றியங்களில் தலைவர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டர் வெடித்து இரண்டு வீடுகள் சேதம்

திருப்பத்தூர்:சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து  2 வீடுகள் தீப்பற்றி  எரிந்தது. மேலும் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தாதன் குட்டை பகுதியில் வசித்துவரும் கூலித்தொழிலாளி அண்ணாமலை (50). இவர் வழக்கம்போல் தந்து வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்  அப்போது சமையல் கியாஸ் சிலிண்டறில் ஏற்பட்ட கசிவின் காரணமாக தீப்பிடித்துக் கொண்டது. இதனால் பயந்த அண்ணாமலை பதறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் .பின்னர் சிறிது நேரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல், டீசல்… கவலையில் வாகன ஓட்டிகள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் இஸ்லாமியருக்கு பாதிப்பா? வாய்ப்பே இல்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

என்.ஆர்.சி சட்டத்தினால் தமிழ்நாட்டில் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக அதிமுகதான் முதல் குரல் கொடுக்கும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சிறுபான்மை மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறும் அதிமுக, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், “குடியுரிமை திருத்தச் சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

CAA எதிர்ப்பு: முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த முகமது அபூபக்கர்

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி கருத்து கேட்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் முகமது அபூபக்கர் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந் முகமது அபூபக்கர்: “என்ஆர்சி, என்பிஆர், சிஏஏ, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் குடியுரிமை குறித்த தெளிவான சட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது திருத்தியமைக்கப்பட்ட குடியுரிமை […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகம்: உறுதி செய்ய உத்தரவு!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளதை உறுதிசெய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் உள்ள 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 2,939 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணி, லார்சன் டர்போ நிறுவனம் மூலம் நிறைவேற்றப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் இணைய வசதியுடன் […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாரின் பெயருடைய வாக்காளர் பட்டியலால் சர்ச்சை!

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாரின் பெயருடைய வாக்காளர் பட்டியலால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலரும் உள் துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே. விஜயகுமாரின் பெயர் இரும்புலியூர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஊர், இவருக்குச் சொந்த ஊரான சென்னை மணப்பாக்கத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனையறிந்த விஜயகுமார் தான் ஒருபோதும் இரும்புலியூரில் வசித்ததில்லை எனக் கூறியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : பொங்கலுக்கு சிறப்பு பேருந்து அறிவிப்பு ….!!

பொங்கலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்து குறித்து அமைச்சர் MR விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் , பொங்கலுக்கு வழக்கம் போல் சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கல் அமைக்கப்பட்டு அங்கிருந்து வெளியூறுகளுக்கு பேருந்துகள் செல்லும்.  சென்னையிலிருந்து 4950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 29, 213 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வருகின்ற 12 13 14 ஆகிய நாட்களில் பேருந்து இயக்கப்படும்.பொங்கல் பண்டிகை முடிந்த பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தாடி வைத்துக் கொண்டு ….. பைத்தியக்காரன்….. கோமாளி …. அமைச்சரையே வசைபாடிய MLA …!!

அமைச்சர் உதயகுமாரை கடுமையான  வார்த்தைகளால் திமுக MLA ஜெ.அன்பழகன் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்த போது ,  இலங்கை தமிழகர்களுக்கு இரட்டை குடியுரிமை தரப்படும் என்று ஏன் இந்த கபட நாடக ஆடுறீங்க. இதே மசோதா மேலவையில் வரும்போது இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக அதிமுக 11 பேர் , பாமக அன்புமணி என அனைவரும் எதிர்த்து ஓட்டு போட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஏதில் ? முதலிடம் …. ஆதங்கத்தில் அடுக்கிய MLA ….!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட திமுக MLA ஜெ.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக சட்டசபை மரபுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பேரவை வளாகத்தில் பேசிய அவர் , சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முதல் இடம் என்று முதல்வர் சொல்லியிருகிறார்கள். ஏதில் ? முதலிடம் கொடுத்தார்கள். சட்ட ஒழுங்கு சரியில்லை என்றால் முதலிடம் கொடுத்துள்ளார்கள் என்கிறார். நெல்லை கண்ணனை கைது பண்ணீங்க சரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமையா இருக்கீங்க……. ”உடனே கோவம் வருது”….. MLA அன்பழகன் காட்டம் …!!

சட்ட ஒழுங்கில் தமிழகம் முதலிடம் என்று ஆளுநர் உரையில் கூறி இருந்ததற்கு திமுக MLA அன்பழகன் கடும் விமர்சனம் செய்துள்ளார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூட்டத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து சட்டப்பேரவை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த திமுக MLA ஜெயக்குமார் அமைச்சர் மற்றும் அதிமுக அரசை கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறுகையில் , நான் பேசுவதை அவர்களால் தாங்க முடியவில்லை. குடியுரிமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 BREAKING:  கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெ.அன்பழகனுக்கு தடை….!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெ அன்பழகனுக்கு தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டார். தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் துவங்கியது.இதில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆளுநர் உரையில் பதிலளித்து பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சரை ஒருமையில் பேசியதாகவும் , அவரை கைநீட்டி பேசுவதாகவும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அவை முனைவரும் , துணை முதலமைச்சருமான  ஓ பன்னீர்செல்வம் அவரை உடனடியாக பேரவையில் நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : NRC-யை முதல் ஆளாக அதிமுக எதிர்க்கும் ….!!

இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பு அரணாக இருக்குமென்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2_ஆவது நாள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.இதில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இந்த பேரவைக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்றுதான் திமுக இன்று காலை வெளிநடப்பு செய்தது. அதற்குப் பின்னர் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதற்க்கு அமைச்சர் ஆர் பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி பண்ணுறது தான் இவரோட வேலை – முதல்வர் ஆதங்கம்

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியது அமளியை ஏற்படுத்தியுள்ளது. 2_ஆம் நாளான இன்று நடைபெற்று  வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியதாக சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேசும்போது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போதெல்லாம்  நடந்தாலும் திமுக உறுப்பினர் ஜெ அன்பழகன் பேரவையில் பிரச்சினையை ஏற்படுத்துவது போன்ற பேச்சுக்கள் தான் பேசுகிறார் என்று குறிப்பிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க பேசினது தப்பு தான்…. நீங்களும் அப்படியே பேசுறீங்க…. முக.ஸ்டாலின் சமரசம் …!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேட்சால் சட்டசபையில் திமுக – அதிமுக உறுப்பினர்களிடையே அமளி ஏற்பட்டது. 2_ஆவது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகரின் பேச்சை கேட்காமல் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசினார். அப்போது அமைச்சர் உட்கார வேண்டும் என்று ஜெ அன்பழகன் பேசியதற்கு அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இப்படி பேசக்கூடாது என்று சட்டப் பேரவைத் தலைவர் சபாநாயகர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரை ஒருமையில் பேசிய திமுக MLA ….. பேரவையில் அமளி …..!!

சட்டப்பேரவையில் திமுக – அதிமுக உறுப்பினர்களிடையே அமளி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2_ஆவது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகரின் பேச்சை கேட்காமல் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசினார். அப்போது அமைச்சர் உட்கார வேண்டும் என்று ஜெ அன்பழகன் பேசியதற்கு அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இப்படி பேசக்கூடாது என்று சட்டப் பேரவைத் தலைவர் சபாநாயகர் பேரவையில் அதற்கான விளக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சட்டம் ஒழுங்கு சரியில்லை” பேரவையில் முதல்வர் பதில் …!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற திமுக MLA கேள்விக்கு முதல்வர் பேரவையில் பதிலளித்தார். 2_ஆவது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேரவையில் பேசிக்கொண்டிருக்கும் போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அரசின் மீது சில கருத்துக்களை அவர் முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி , நாட்டிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்றும் ,  அதற்கான விருதினை மத்திய […]

Categories
மாநில செய்திகள்

“எதிர்க்கட்சியின் தடையை மீறிய அதிமுக”…. பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி.!!

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சியினர் நீதிமன்றம் சென்றபோதும், அதிமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றிவருவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். கோவை பூ மார்க்கெட் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஒன்பது லட்சத்து 67 ஆயிரத்து 649 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஜெயலலிதா முதலமைச்சராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் தளபதி இப்படி பண்ணுறீங்க….. 2 நாளுமே வெளிநடப்பு தானா ? ஸ்டாலின் விளக்கம் …!!

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரை புறக்கணித்து திமுகவினர் 2ஆவது நாளாக வெளிநடப்பு செய்தனர். 2_ஆம் நாளான இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சியான திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , கடந்த 2_ஆம் ஆம் தேதி சட்டப்பேரவை தலைவருக்கு , இந்திய குடியுரிமை திரும்ப சட்டத்தை திரும்ப பெற வேண்டும். அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினேன். இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகன் , மருமகள் கைது …. நீதிமன்ற உத்தரவால் ஆடிப்போன சிதம்பரம் ….!!

நிலம் வாங்கியதை கணக்கில் காட்டவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார். 2015 மற்றும் 16 ஆம் ஆண்டில் முட்டு காட்டில் 1.8 ஏக்கர் நிலம் வாங்கியதில் 1.35 கோடி ரூபாய் கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறையினர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதும்  வழக்கு பதிவு செய்தனர். 2018-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு எழும்பூரில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW : திமுக_வினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு …!!

குடியுரிமை திருத்த சட்டமசோதாவை விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமிழக சட்டசபையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு ….!!

மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஜெய்சுகின் என்பவர்தான் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதற்கு மூல மனுதாரராக இருந்தார்.அவர்தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ச்சியாக சட்ட போராட்டங்களை நடத்தி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மிக முக்கியமாக காரணமாக இருந்தார். இவர் தற்போது தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்து இருக்கிறார். உச்சநீதிமன்றம், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது  இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உள்ளாடைக்குள் ரூ.32,00,000 மதிப்புள்ள தங்கம்… 3 பேரை தூக்கிய சுங்கத்துறையினர்.!

கொழும்பிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ. 32 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பல்வேறு நாடுகளிலிருந்து சென்னை வந்த பயணிகளின் உடமைகளைச் சோதனையிடும் பணியில் சுங்கத் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ராவுத்தர் (43), கடலூரை சேர்ந்த சையத் முஸ்தபா (26), புதுக்கோட்டையைச் சேர்ந்த உதயகுமார் (40) ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

‘தரமற்ற ரேஷன் அரிசி…. 1 கிலோவுக்கு ரூ 25 வழங்க வேண்டும்… ஆட்சியர் அலுவலகத்தில் மனு.!

ரேஷனில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பின் அதற்கான பணத்தை மக்களுக்கு அரசு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. குறைதீர் கூட்டம் உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 4ஆம் தேதி மாலை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசின் வழக்கமான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW : 15 நிமிடத்திற்கு சட்டப்பேரவை ஒத்திவைப்பு ….!!

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தொடர் இரங்கல் தீர்மானத்தை அடுத்து 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுயேச்சை வேட்பாளர்கள் கடத்தல்: திமுக தொடங்கிவைத்த ‘கூவத்தூர் கும்மாளம்’.!

அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு சுயேச்சை கவுன்சிலர்கள் மூன்று பேரை திமுகவினர் காரில் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆறு இடங்களும் திமுக கூட்டணிக்கு ஏழு இடங்களும் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலில் செந்தில், பாரதி ஜெயக்குமார், மோனிஷா, சரிதா, சாந்தி, சிந்தாமணி ஆகிய ஆறு சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றிருந்தனர். மொத்தம் ஒன்றியத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆகும். […]

Categories
மாநில செய்திகள்

சென்னை விமானத்தில் இயந்திரக் கோளாறு: 172 பயணிகள் உயிரை காப்பாற்றிய விமானி..!!

சென்னையில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகருக்கு சென்ற விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.20 மணிக்கு 172 பயணிகள், ஆறு விமான ஊழியர்கள் என 178 பேருடன் பயணிக்கவிருந்த இண்டிகோ விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டுப்பிடித்தார். இதையடுத்து விமானம் புறப்படவில்லை. விமான பொறியாளா்கள் பழுதடைந்த இயந்திரங்களை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டனா். எனினும் உடனடியாக சரிசெய்யமுடியவில்லை. இதனால் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மறைமுக தேர்தல் சட்ட மசோதா” இன்று தாக்கலாக வாய்ப்பு …!!

சட்டசபையின் இன்றைய கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. JNU பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இன்றைய கூட்டத்தொடரில் மேயர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW : சட்டப்பேரவை 2_ஆம் நாள் நிகழ்வு தொடங்கியது ….!!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவின் 2_ஆம் நாள் நிகழ்வு தற்போது தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. JNU பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பாலாற்றுக்குள் பாய்ந்த கார்… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.!!

பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழத்தில் பாலாற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் தனது சொகுசுக் காரில் வேலூரை நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தார். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி சுமார் 30 அடி ஆழத்தில் பாலாற்றில் விழுந்து நொறுங்கியது. இதில் நல்வாய்ப்பாக ராஜேஷ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

 குஜிலியம்பாறையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவும், சிவகங்கை மாவட்டம் அல்லூரில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் கோரி வழக்கு தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்ற தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” குஜிலியம்பாறை தாலுகா வடுகம்பாடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு என்னை எதிர்த்து சேகர் என்பவர் போட்டியிட்டார். ஒன்பதாவது சுற்று முடிவில் 300 ஓட்டுகள் […]

Categories
பல்சுவை

அதிகரித்த பெட்ரோல், டீசல்.. கவலையில் வாகன ஓட்டிகள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”யூடர்ன் அடித்து ஐக்கியமான புகழேந்தி”…… அதிர்ச்சியில் TTV தினகரன் ….!!

அமமுகவிலிருந்து விலகிய புகழேந்தி இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அமமுகவிலிருந்து விலகிய புகழேந்தி இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் தாய்க் கழகத்தில் மீண்டும் இணைந்தோம். இவ்வளவு நாட்களாக கூவம் ஆற்றில் இருந்தோம். அங்கிருந்து நாற்றம் தாங்க […]

Categories

Tech |