Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

புகையும் இல்லை….. இரைச்சலும் இல்லை…. கூச்சலின் இனிமையை….. கேட்டு ரசிக்கும் கிராம மக்கள்….!!

ஈரோட்டில் கெட்டி சமுத்திரம் ஏரியில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து இனிமையாக கூச்சலிட்டு வருவதை அப்பகுதி மக்கள் கேட்டு ரசித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த பர்கூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கெட்டி சமுத்திரம் ஏரியானது சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது சமீபத்தில் 9 ஆண்டுக்கு பின் முழு கொள்ளவை எட்டியது. இதை எண்ணி அப்பகுதி மக்கள் சந்தோஷம் அடைந்தனர். வெளிநாட்டு பறவையான செங்கல் நாரை உள்ளிட்டவை ஏப்ரல் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஏரியை […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள்

30 கிலோ…. ரூ150 தான்….. பறிக்க ஆளில்லாமல்…. அழுகி வீணாகும் தக்காளி….. வேதனையில் தர்மபுரி விவசாயிகள்….!!

தர்மபுரியில் தக்காளியை பறிக்க ஆளில்லாமல் அழுகி வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தர்மபுரியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். அது நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ள சமயத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்குதடையின்றி செல்லலாம் என்று அரசு அறிவித்த போதிலும், தக்காளியை பறிக்க கிராம மக்கள் யாரும் முன் வருவதில்லை என்பதால், தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

எங்க ஊருக்கு போகணும்….. அனுமதி கொடுங்க….. கலெக்டர் அலுவலகம் முன் திரண்ட மக்கள்…. கோவையில் பரபரப்பு….!!

கோயம்புத்தூரில் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ஊருக்கு செல்ல வேண்டி பொதுமக்கள் கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு ஆனது ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இறந்தவர்களின் ஈமச்சடங்கு திருமணம் உள்ளிட்ட அவசர காரியங்களுக்காக செல்ல விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பித்த பின் பாஸ் பெற்று செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட சொந்த ஊரைவிட்டு ஆங்காங்கே வசிக்கும் மக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல வேண்டியும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னோட பைக் எங்க….. வாலிபர் அடித்து கொலை…. கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது….!!

சென்னையில் தனது பைக்கை திருடிய நபரை நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராமச்சந்திரன். 20 வயதான இவர் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சென்ற பிப்ரவரி மாதம் இரு சக்கர வாகனம் காணாமல் போனது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். […]

Categories
அரசியல்

நீங்க ஒருவர் அல்ல….. உங்க குடும்பம் எல்லாரும் … அம்மாவின் அரசுக்கு முக்கியம் ..!!

தமிழகத்தில் ஊரடங்கை நீடித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முழு அறிக்கையின் சாராம்சம் :  உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த 24.03.2020 அன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதனை 15.04.2020 அன்று காலை வரை நீடித்தது. உலக ஊரடங்கு உத்தரவை தீவிரமாக கடைபிடித்து வந்ததன் காரணமாக தமிழ்நாட்டில் நோய் தொற்று  பெருமளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ல் இருந்து 1173ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிகமாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை : சிவப்பு நிற மாவட்டங்கள் : 1. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளிடமிருந்து 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு – வேளாண்துறை செயலாளர் விளக்கம்!

தமிழகத்தில் 97.54% மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா தெரிவித்துள்ளார். உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா மற்றும் வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, விவசாயிகளிடம் இருந்து 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், செடிகளில் கருகிய 35,000 மெட்ரிக் டன் பூக்களை சென்ட் ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

“அத்தியாவசிய பொருள்” வாகன பறிமுதல் கூடாது…… திருச்சியில் தொழிலாளர்கள் போராட்டம்…!!

திருச்சியில் இனி வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ய கூடாது என 100க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள குட்செட் யாரட்க்கு நாள்தோறும் அரிசி கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சரக்கு ரயில் மூலம் வந்து சுமை தூக்கும் தொழிலாளர்களால் இறக்கப்பட்டு பின் லாரியில் ஏற்றி அரசு குடோனுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது ஊரடங்கு காரணமாக சுமார் 350க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்குகளை ஏற்றி செல்வதால் லாரி ஓட்டுநர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

ஏப்ரல் 16 முதல்….. வாரத்தில் 2 நாள் மட்டும் தான்….. பச்சை…. நீளம்…. பிங்க்…. அட்டை…. நெல்லை ஆட்சியர் அதிரடி…!!

நெல்லையில் இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நெல்லை மாநகரத்தில் காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளி கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் இதனை தடுக்கும் […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள்

காய்கறிகள் இலவசம்…. இலவசம்…. வாட்சப் வதந்தியை நம்பி…… ஏமாந்து போன வியாபாரி….!!

திருப்பத்தூரில் வாட்ஸ்அப் வதந்தியை நம்பி காய்கறி வியாபாரி ஒருவர் ஏமாந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் எங்கெல்லாம் மக்கள் கூடுகிறார்களோ அந்த கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. இதை பயன்படுத்தி பலர் வதந்தி பரப்பி வருகின்றனர். அந்த […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

ஒன்று கூடி வீடியோ பதிவு….. கேள்விக்குறியான சமூகஇடைவெளி…… மக்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு….!!

திருப்பூரில் சமூக இடைவெளியை கேள்விக்குறியாக்கும் விதமாக ஒன்றுகூடிய மக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்க வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளியே வரும் சமயங்களிலும் முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுரையும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

இனி எல்லாம் வீட்டுக்கு….. வெளியே வர கூடாது….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…..!!

மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் இனி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அத்தியாவசிய அரசுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தாசில்தார், காவல்துறை உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து, காய்கறிகள், பழங்கள், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்டவை தங்குதடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

தலா 16…. கொரோனா வார்டாக மாறிய ரயில் பெட்டிகள்….. விழுப்புரத்தில் அதிரடி நடவடிக்கை…..!!

விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றி அம்மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்குநாள் தாக்கம் அதிகரிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயிலின் […]

Categories
மாநில செய்திகள் விருதுநகர்

ரேஷன் கடையில் தரமற்ற அரிசி….. இதுதான் எங்க உணவா….? வேதனையில் மக்கள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் உணவின்றி கஷ்டப்படும் அவலம் ஏற்படும் என்பதை உணர்ந்த தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூபாய் 1000 நிவாரணத் தொகையும், அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விலை இல்லாமல் வழங்குமாறும் உத்தரவிட்டது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை பகுதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 1075ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 199ஆக உயர்ந்துள்ளது. இதேபோல கொவையில் மேலும் 22 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 911ஆக உயர்வு – அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834 லிருந்து 911ஆக உயர்ந்துள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்துள்ளார். மேலும் இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களின் 5 பேர் மூலமாக கொரோனா பரவி உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஊரடங்கில் மக்கள் சிரமங்களை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது […]

Categories
திருநெல்வேலி தூத்துக்குடி பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆங்காங்கே 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதேபோல சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்பட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும்  சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகத்தில் 30 -40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை  காற்று […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை: தனி மாவட்டத்திற்கான அரசாணை வெளியீடு!

 மயிலாடுதுறையை தனி மாவட்டமாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது  தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 7 ஆம் தேதி விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அடிப்படையில் மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை முதல்வர் அறிவித்தார். நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டத்தை பிரித்ததாக முதல்வர் தெரிவித்த்திருந்தார். இந்தநிலையில் நாகப்பட்டினம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…. பல்வேறு இடங்களில் கனமழை!

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு உள் தமிழக மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கோவை, நீலகிரி,ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வானம் தெளிவாக […]

Categories
அரசியல்

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும் – முதல்வர் பழனிசாமி!

மக்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல, மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் பேசுகையில், “மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ 1000 […]

Categories
அரசியல்

BREAKING : 30 நிமிடங்களில் பரிசோதனை… 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் விரைவில் வாங்கப்படும்… முதல்வர் பழனிசாமி!

30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்ட உள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் குறைவு தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமானநிலையத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றார். மேலும் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

விளக்கு வைங்க….. அவதூறு வீடியோ…. 4 பேர் கைது…. குமரியில் பரபரப்பு….!!

பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாக வீடியோ  வெளியிட்ட நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  இந்திய மக்களுடன் தொலைக்காட்சி வழியாக, சமூக வலைதளங்கள் வழியாக உரையாடல் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இதற்கு முன்பாக மக்களை கைதட்ட சொன்ன அவர் தற்போது மின் விளக்குகளை அணைத்து வீட்டின் வாசலில் 9 நிமிடங்கள் விளக்கு வைக்குமாறு அறிவுறுத்தியிருந்தார். அவரது அறிவுரையை ஏற்று பலரும் அதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 நாட்களில்… தமிழகத்தில் ஊரடங்கை மீறிய 64,733 பேர் கைது!

ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் 64,733 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2ஆவது உயிரிழப்பு ? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்த 2ஆவது நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரசு மருத்துவமனை கட்டிடங்கள் முழுதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4500 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று ஏற்படும் இடங்களை கண்டறிந்து கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா  பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவசர நிலையை உணர்ந்து மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா” சென்னை வாசிகளே…. இந்த 8 இடங்களுக்கு போகாதீங்க….!!

சென்னையில் 8 இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக தமிழக அராசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவை ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பித்துள்ளது. அதனை ஏற்று பொதுமக்களும் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அரசு […]

Categories
மதுரை மாநில செய்திகள்

ஊரடங்கை கடைபிடிக்க….. கலை இலக்கிய போட்டி….. மதுரை MP அறிவிப்பு…!!

குழந்தைகளை ஊரடங்கை கடைபிடிக்க வைக்க கலை இலக்கிய போட்டிகளை நடத்த MP சு.வெங்கடேசன் முடிவு செய்துள்ளார்.   கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவானது இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு  நேரம் போவதே கிடையாது. ஆகையால், அவர்களை வீட்டிற்குள் இருக்க செய்யும் விதத்திலும், அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் கலை இலக்கியப் போட்டிகளை நடத்த மதுரை எம்பி முடிவு செய்திருக்கிறார். அதன்படி, பங்கேற்கும் அனைவருக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டாம் – தலைமை நீதிபதி எச்சரிக்கை …!!

ஊரடங்கை மீறுவோருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி பல்வேறு அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். தமிழ்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. 120க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளநிலையில் ஒருவர் உயிரிழந்து 6 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து தப்புவதற்கு சமூக விலகலே முக்கியம் என்பதால் மத்திய மாநில அரசுக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து தெரிவித்தால் உரிய சிகிச்சை – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை சென்னை, சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இதையெல்லாம் கிளீன் பண்ணுங்க….. பொதுமக்களுக்கு…. மாநகராட்சி வேண்டுகோள்….!!

பொதுமக்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்குக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தற்போது கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் நுண்ணுயிரிகள் தாக்கம் அதிகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் நமது வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே போதும். அதன்படி பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது.  அதில், நாம் நாள்தோறும் கை வைத்து பயன்படுத்தும் பொருட்களான, கதவின் வெளிப்புற கைப்பிடி உள்புற கைப்பிடி, செல்போன், டிவி, ரிமோட் , கீ போர்டு, லேப்டாப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…. அடுத்த 3 மாதம்…. அசத்தல் OFFER…. EPS அறிவிப்பு…!!

தமிழகத்தில்  கடன் உள்ளிட்டவற்றிற்கான தவணை தொகை, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக தமிழகத்தின் முக்கிய நோக்கமாக மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வேலைக்குச் செல்லாத மக்கள் ஊதியமின்றி சேர்த்து வைத்துள்ள சேமிப்பை வைத்துக்கொண்டு நாள்கள் கழித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், […]

Categories
அரசியல்

இத மட்டும் நம்பாதீங்க…. ஆதாரம் இல்லை…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!

மஞ்சள் வேப்பிலையை நம்பி அஜாக்கிரதையாக செயல்படக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரித்து வருவது போல அது குறித்த வதந்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பரவிய வதந்தி ஒன்று இந்திய மக்களில் பெரும்பாலானோரால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அது என்னவென்றால் மஞ்சள் வேப்பிலை கலந்த கலவையை வீட்டின் முன் தெளித்தல் அல்லது தோரணம் கட்டினாலும் கொரோனா  வீட்டிற்குள் வருவதற்கு வாய்ப்பே இல்லை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43 வயது நபருக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும், 2 பேருக்கு மதுரை […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

மீனவர்களுக்கு உதவியது எனக்கு மகிழ்ச்சி… தமிழக முதல்வருக்கு நன்றி – பவன் கல்யாண்!

ஆந்திராவைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்களுக்கு தகுந்த உதவிகள் செய்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க […]

Categories
அரசியல்

மீனவர்களை காப்பாத்துங்க… “நாங்கள் கவனித்துக்கொள்வோம்”… பவன் கல்யாண் வேண்டுகோளுக்கு முதல்வர் பதில்!

ஆந்திரா மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் பவன் கல்யாண் வைத்த கோரிக்கைக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க வந்தவர்கள், இதர தொழிலாளர்கள் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

144…. முற்றிலும் இலவசம்….. அமைச்சர் அறிவிப்பு…!!

மதுரையில் சாலையோர மக்களுக்கு 3 வேலையும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வீடின்றி சாலையோரம் வாழ்பவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உணவுத் தட்டுப்பாடு என்பது ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அமைச்சர் ஆர் பி உதயகுமார் உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளார். அது என்னவென்றால் மதுரை திருமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சாலையோரம் மக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் என அனைவரும் உணவின்றி தவிக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மீனவர்களுக்கு உதவி செய்யுங்க”… தமிழக முதல்வரிடம் பவன் கல்யாண் வேண்டுகோள்!

சென்னையில் சிக்கித்தவிக்கும் ஆந்திரா மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் பவன் கல்யாண், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க வந்தவர்கள், இதர […]

Categories
அரசியல்

வேப்பிலை… மஞ்சள்…. கொரோனாவை விரட்டுமா….?

வேப்பிலை மஞ்சள் கொரோனாவை அழிக்குமா என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கொரோனா குறித்து பல்வேறு வதந்திகள் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அந்த வகையில், மஞ்சள் வேப்பிலை கொரோனாவை அழித்துவிடும் என்ற செய்தி மிக வேகமாக பரவி வருகிறது. கிராம பகுதிகளில் இதனை செய்யவும் மக்கள் தொடங்கிவிட்டனர். இது கிருமிநாசினி தான் இல்லை என்று மருத்துவர்களும் அறிவியல் அறிஞர்களும் மறுக்கவில்லை. இதேபோன்று எத்தனை கிருமிநாசினி வேண்டுமானாலும் நாம் நம் வீடுகளில் பயன்படுத்தலாம். ஆனால் இவை […]

Categories
அரசியல்

சென்னை வாசிகளே….. இனி உணவுக்கு பஞ்சமே கிடையாது…. சேவையில் இறங்கிய கோவில் நிர்வாகங்கள்….!!

சென்னையில் உள்ள பிரபல கோயில்களில் ஆதரவற்றோர்களுக்கும், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும் உணவு தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புகளை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்க மக்கள் வெளியே சென்று வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் முதியோர், வீடுகளின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு கிடைப்பதில் இக்காலகட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு […]

Categories
அரசியல்

144…. யாரை கேட்டு கோவிலை திறந்த…. பூசாரியை லத்தியால் விலாசிய போலீஸ்…!!

பூசாரி உட்பட பக்தர்களை காவல்துறையினர் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதனை மீறுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆபத்தை சற்றும் உணராமல் தமிழகத்தின் ஒரு கிராமப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரி ஒருவர் மக்களை அழைத்துக் கொண்டு கோயிலை திறந்து பூஜை நடத்தியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Categories
அரசியல்

அதிக விலைக்கு விற்றால்…. கடை உரிமம் ரத்து…. தமிழக அரசு எச்சரிக்கை….!!

காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது கொரோனா வைரஸை தடுப்பதற்காகவே நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே வாங்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் என்று சொல்லப்படும் காய்கறி உள்ளிட்டவை அதிக விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் […]

Categories
அரசியல்

சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லலாம் – புதிய முயற்சி செய்துள்ள போலீஸ் ..!!

அவசர பயணத்துக்கு உதவ கட்டுப்பாடு அறை உருவாக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல்த்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சமூக விலகலை கடைபிடிக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 42 பேர் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிகை 42 ஆக உயர்ந்துள்ளது. #CoronaUpdate: #Covid_19 positive confirmed for 25 Y M from West Mambalam, Chennai. Pt is undergoing treatment in isolation at a Private Hospital. His condition is stable @MoHFW_INDIA @CMOTamilNadu […]

Categories
அரசியல்

நான் ‘கொரோனா’ வைரஸ்… நூதன முறையில் விழிப்புணர்வு… அசத்தும் இன்ஸ்பெக்டர்!

கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம்  இன்ஸ்பெக்டர் ஒருவர் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நோயின் தீவிரம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பதால் மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், நோய் பரவாமல் தடுக்கவும் நாடு (இந்தியா) முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வைரஸின் தீவிரத்தை உணராமல் வாகன […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதீத விலை….. வாட்ஸ்ஆப் மூலம் விற்பனை….. 2 வாலிபர்கள் கைது….!!

சென்னை கோடம்பாக்கம் அருகே அதிக விலைக்கு சனிடைசர் விற்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 144 தடை உத்தரவால் நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை வாங்க மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், மருந்துக் கடைகளில் சனிடைசர் முககவசம் உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில், கோடம்பாக்கத்தில் கார்த்திகேயன், நிஜாம் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

“கொரோனா” பெண் மரணம்…. ரேஷன் கடைகள் மூடல்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

ஈரோட்டில் கொரோனா அச்சம் காரணமாக ரேஷன் கடைகள் மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பல ஆண்டுகளாக பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த ரேஷன் கடைக்கு அருகிலேயே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இது கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கடையில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு  சில நாட்களாகவே காய்ச்சல் அதிகரித்து வந்த […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

“கொரோனா” வரலாற்றில் முதல்முறை…. பழனி பக்தர்கள் வருத்தம்….!!

வரலாற்றில் முதன்முறையாக பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலில் மிகப் பிரசித்தி பெற்ற திருவிழா பங்குனி உத்திர திருவிழா. வருகிற மார்ச் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி திருக்கல்யாணமும், மறு நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற இருந்தது. இந்நிலையில் வைரஸ் பரவலை தடுப்பதற்காக பாரதப் பிரதமர் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பெண் மருத்துவருக்கு கொரோனா….? முதற்கட்ட பரிசோதனை…. கோவையில் பரபரப்பு….!!

கோவையில் 45 வயது பெண் மருத்துவர் காய்ச்சல் சளி  காரணமாக தனி வார்டில் சிகிச்சைகக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூரில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு கடந்த 23ம் தேதி 45 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் பணியில் அமர்த்தப்பட்டார். இவருக்கு நேற்றைய தினம் கடும் காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டு உள்ளது. இதனை கண்ட சிலர் அவரை உடனடியாக இ எஸ் ஐ மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்தனர். அங்கு இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா” வீடியோ கால்…. கைதிகள் மகிழ்ச்சி….!!

சென்னை புழல் சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்தனர். சென்னை புழல் சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனை சிறையுலும், 1500க்கும் மேற்பட்ட கைதிகள் விசாரணை சிறையிலும் பெண்கள் சிறையில் 100-க்கும் மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கொரோனாவை தடுக்கும் வண்ணம் கடந்த 24ஆம் தேதி முதல் கைதிகளை  நேரில் பார்க்க குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கைதிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். கைதிகளின் மன உளைச்சலை குறைக்கும் விதமாக சூப்பிரண்ட் செந்தாமரைக்கண்ணன் […]

Categories
அரசியல்

கமலுக்கு கொரோனா…..? ஏப்ரல் 6 வரை தனிமை….. நோட்டீஸ் ஒட்டி மாநகராட்சி அறிவுரை…..!!

கொரோனா அச்சத்தால் நடிகர் கமலஹாசன் ஏப்ரல் ஆறாம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். மேலும் கொரோனா அறிகுறி சிறிதளவு தென்பட்டாலும், மக்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரத் துறை […]

Categories

Tech |