வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து இடங்களிலும் தேர்தல் நடைபெற்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதிமுக ,திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். […]
