தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜனை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்தார். இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம் தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் ஹைதராபாத் ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்றார். இவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திரா எஸ். சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற தமிழிசைக்கு தெலங்கானா […]
