டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் அருண் ஜெட்லியின் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ஓபிஎஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 12: 7 மணியளவில் பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர் […]
