Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிரேக்கிங் நியூஸ்’ சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜெய்.!!

‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகர் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான ஜெய், ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற புதிய படத்தில் தற்போது நடித்துவருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பானுஸ்ரீ நடிக்கிறார். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் இப்படத்தை திருக்கடல் உதயம் தயாரிக்கிறார்.சமூகத்தின் நலனுக்காக சாதாரண மனிதன் ‘சூப்பர் ஹீரோ’வாக மாறுகிறார். இப்படத்தில் வில்லன்களாக ராகுல் தேவ், தேவ் கில், ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் ஜெ. பிரகாஷ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தள்ளிப்போகும் ‘ஆதித்ய வர்மா’ ரிலீஸ்…!!

நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இதன் தமிழ் ரீமேக்காக உருவாக்கப்பட்ட ‘ஆதித்ய வர்மா’ படத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், நாயகனாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இயக்கியுள்ளார். ‘ஆதித்ய வர்மா’ படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குட்டி தல.. குட்டி ஷாலினி.. ”இரு வைரங்கள்” ….. இந்தியளவில் ட்ரெண்டிங் …!!

நடிகர் அஜித்தின் இரு குழந்தைகள் போட்டோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட மிகப்பெரிய நடிகராக வலம்வருபவர் நடிகர் அஜித் குமார். ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் அஜித் நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனோஷ்கா என பெயர் வைத்தனர். அதன் பின் கடந்த 2014-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. ஆண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமலா பாலின் அடுத்த படத்திற்கு சென்சார் என்ன கொடுத்தாங்க தெரியுமா?

‘ஆடை’ படத்தின்மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற நடிகை அமலா பால் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் சென்சார் வேலைகள் முடிந்துள்ளது. நடிகை அமலா பால் விவாகரத்திற்குப் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தமிழிலில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் விமர்சனங்களை சந்தித்தது. ரத்னகுமார் இயக்கியிருந்த ஆடை திரைப்படத்தில் அமலா பால் மேலாடை இல்லால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊபர் கார் ஓட்டுநர் மீது நடிகை ரித்விகா புகார்..!!

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான நடிகை ரித்விகா, ஊபர் கார் ஓட்டுநர் மீது புகார் அளித்துள்ளார். ‘பரதேசி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்பு ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். மேரி கதாபாத்திரத்தில் நடித்த ரித்விகா தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.   அதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் சீசன் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர் பட்டத்தையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#MeToo : என்னையும் தவறான உறவுக்கு அழைத்தார்கள் – விஜய் பட கதநாயகி குற்றச்சாட்டு

சில மாதங்களுக்கு முன் பெண்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட பாலியல் இன்னல்களை மீ டூ (#Meetoo) என்ற ஹேஷ்டேக்கின் மூலமாக சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வகையில், தனது 15ஆவது வயதில் பிரபல நடிகரிடம் ஒத்துழைத்து போகுமாறு தன்னை வற்புறுத்தியதாக விஜய் உடன் ’நெஞ்சினிலே’ படத்தில் ஜோடியாக நடித்திருந்த இஷா கோபிகர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில் நடிகர் பிரசாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முருகதாஸ் என்னை ஏமாற்றிவிட்டார் – நயன்தாரா பகீர் பேட்டி

கஜினி படத்தில் காண்பிக்கப்பட்ட எனது கதாபாத்திரத்தை பார்த்து மிகவும் ஏமாற்றமடைந்தேன் என நயன்தாரா கூறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிவரும் நடிகை நயன்தாரா, தனது உழைப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். ஐயா படத்தில் அறிமுகமானாலும் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து ‘சந்திரமுகி’ படத்தில் காதல், ரொமான்ஸ் காட்சிகளில் வசீகரித்து பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“15 வயதில் என்னை தவறான உறவுக்கு அழைத்தார்கள்”… விஜய் பட நடிகை பகீர்..!!

தனது 15ஆவது வயதில் பிரபல நடிகரிடம் ஒத்துழைத்து போகுமாறு தன்னை வற்புறுத்தியதாக விஜய் உடன் ’நெஞ்சினிலே’ படத்தில் ஜோடியாக நடித்திருந்த இஷா கோபிகர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான ’காதல் கதை’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி பின் அரவிந்த் சாமியுடன் என் சுவாச காற்றே, நடிகர் விஜய்யுடன் நெஞ்சினிலே, விஜயகாந்த்துடன் நரசிம்மா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “ஜடா” படம் டீசர்..!

நடிகர் கதிர் நடித்துள்ள ஜடா படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் இதுவரை இரண்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. பரியேரும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும் தனி இடத்தையும் பிடித்துள்ள நடிகர் கதிர். நல்ல கதையும் கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதிர், தற்போது அறிமுக இயக்குநாரான குமரன் இயக்கத்தில் ஜடா என்னும் படத்தில் நடித்துள்ளார். ஆறுபேர் கொண்ட அணிகள் விளையாடும் கால்பந்தாட்ட போட்டிகளில் நடக்கும் கதைகளம் அதைச்சுற்றி நடக்கும் பிரச்னைகளைப் பற்றியும் கூறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற இயக்குநர் வசந்த்…..!!

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தின் இயக்குநர் வசந்தை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, ‘ரிதம்’, ‘சத்தம் போடதே’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் இயக்குநர் வசந்த்.இவர் தற்போது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இன்னும் திரைக்கு வராத இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளை வாரிக் குவித்து வருகிறது. இயக்குநர் வசந்தே செந்தமாக தயாரித்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

5 மொழிகள் …. 280 குழந்தைகள்…. திரைக்கு வரும் கிர்மிட் படம் ….!!

கேஜிஎப் இசையமைப்பாளர் ரவி பஸ்ருர் 280 குழந்தைகளை வைத்து ’Girmit’ (கிர்மிட்) எனும் படத்தை இயக்கியுள்ளார். குழந்தைகளுக்கு பெரியவர்களின் குரல் கொடுத்து எடுக்கப்பட்டிருந்த ஃப்ளிப்கார்ட் விளம்பரத்தைப் பார்த்த உத்வேகமடைந்த கேஜிஎப் இசையமைப்பாளர் ரவி பஸ்ருர், அதுபோன்று திரைப்படத்தில் முயற்சி செய்யலாம் என முடிவு செய்திருக்கிறார். அதன் விளைவாக ‘கிர்மிட்’ என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். இது அவர் இயக்கத்தில் உருவாகும் 4ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சகா சாலிக்ரமா, அஷ்லெஷ் ராஜ், தனிஷா கோனி, அராத்யா ஷெட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் ‘ஆக்‌ஷன்’ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!!

தீபாவளி விருந்தாக பிகில், கைதி ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு ட்ரீட் தந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி – விஷால் படங்கள் ஒரே நாளில் வெளியாகி விருந்து படைக்கவுள்ளது. சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஆக்‌ஷன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்பு, அசத்தலான அதிரடி காட்சிகள் என முழுக்க முழுக்க சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஆக்‌ஷன்’. விஷால் – தமன்னா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் வெளியீடு தாமதம்..!!

 ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படம் வெளியீட்டில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. நடிகர் சூர்யா நடித்து ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவரும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’ என்பது பலரும் அறிந்ததே. இத்திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. ஆனால் அதைவிட முக்கியான செய்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘பெண்குயின்’ படப்பிடிப்பு நிறைவு..!!

ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் ‘பெண்குயின்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்திருக்கிறது. அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்துமுடிந்தபின் இப்படத்திற்கு பெண்குயின் என்று பெயர் வைக்கப்பட்டது. இது கீர்த்திக்கு 24ஆவது படமாகும். தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு..!!

மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடலும், நடிகையுமான மீரா மிதுன் சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், சில சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு காரணமான காவல் துறையினர், எனது அடுத்தக்கட்ட நடவடிக்கையால் நிச்சயமாக பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அதிரடியாக பேசினார். இந்தப் பேட்டி முடிந்து இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தை தத்தெடுக்க லாரன்ஸிடம் உதவி கேட்ட காஜல் பசுபதி..!!

நடிகை காஜல் பசுபதி குழந்தை தத்தெடுப்பதற்காக உதவி செய்யக்கோரி நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ட்வீட் செய்திருக்கிறார். இதற்காக நெட்டிஸன்கள் அவரைப் பாராட்டிவருகின்றனர். நடிகை காஜல் பசுபதி குழந்தையைத் தத்தெடுப்பதற்காக உதவி செய்யக்கோரி நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ட்வீட் செய்திருக்கிறார். இதற்காக நெட்டிசன்கள் அவரைப் பாராட்டிவருகின்றனர். ‘கோ’, ‘மௌன குரு’ போன்ற திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை காஜல் பசுபதி. இவர் பிரபல ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களால் கவனிக்கப்பட்டவர். தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ராகவா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக ‘பிகில்’ படைக்கும் சாதனை …!!

மாஸ் ஹீரோக்களின் படங்கள் தற்போது சர்வதேச ரீதியாக வியாபாரமாகி வரும் நிலையில், தமிழ்ப் படங்கள் ரிலீசாகாத பல்வேறு நாடுகளிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘பிகில்’ திரைப்படம் முதல் முறையாக ஜோர்டனில் திரையிடப்படவுள்ளது. சென்னை: தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பிகில்’ திரைப்படம் ஜோர்டனில் முதல் முறையாக திரையிடும் தமிழ்ப் படம் என்ற சாதனை படைத்துள்ளது.கால்பந்து விளையாட்டை மையமாகவைத்து வெளிவந்த ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. படத்தில் இடம்பெற்ற ‘சிங்கப்பெண்ணே’ பாடல் பட்டிதொட்டியெங்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பறிவாளன் 2 முதல் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்….!!

விஷால் நடித்த துப்பறிவாளன் 2 பாகம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் துப்பறிவாளன் 2 என்ற பெயரில் படமாகிறது. முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கின் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். விஷால் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக புதுமுகம் ஆஷியா நடிக்கிறார். நாசர் , ரகுமான் , பிரசன்னா , கௌதமி , சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

28 வருடங்களுக்குப் பிறகு இணையும் ராஜ்கிரண்-மீனா ….!!

குணச்சித்திர நடிகராக வலம் வரும் ராஜ்கிரண்னுடன் 28 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் பிரபல நடிகை நடித்துள்ளார். ஒரு காலத்தில் ஹீரோவாக கலக்கிய நடிகர் ராஜ்கிரன் அரண்மனைக்கிளி , எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார். தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வரும் ராஜ்கிரண் குபேரன் என்கின்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு அதில் ஒரு பாடலையும் எழுதி இருக்கிறார். இதில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். என் ராசாவின் மனசிலே , பாசமுள்ள பாண்டியரே படங்களுக்குப் பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகில் வசூல் சாதனை… சவால் விட்ட திரையரங்கம்….. !!

பிகில் படத்தின் வசூல் குறித்து திரையரங்கம் சவால் விட்டது சினிமா துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் அட்லி கூட்டணியில் மூன்றாவது படமாக தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் அக்டோபர் 25ஆம் தேதி வெளியான படம் பிகில். இப்படம் வெளியாகி அன்றைய தினத்திலிருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வழக்கமாக விஜய் படத்தின் வசூல் விவரங்கள் என்பது தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாது அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் காரணம். விஜயின் படங்கள் சமீப காலமாகவே தமிழ் சினிமாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குநர் அவதாரம் எடுக்கும் ‘தர்புகா சிவா’ – படக்குழுவின் புதிய அறிவிப்பு ….!!

இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கும் புதிய படத்தின் பெயர் வரும் 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராஜ தந்திரம் படம் மூலம் நடிகராகவும், சசிகுமாரின் கிடாரி படம் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர் தர்புகா சிவா. இசையமைப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட தர்புகா சிவா, இயக்குநர் அவதாரம் எடுத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்நிமிர், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களில் இவர் இசையமைத்த பாடல்கள் நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வரலாற்றை படமாக்க கால அவகாசம் தேவைப்படுகிறது’ – தி அயன் லேடி இயக்குநரின் எக்ஸ்கியூஸ்

‘தான் இயக்கும் படத்தின் கதையை எடுத்து முடிப்பதற்காக முக்கிய நடிகர்களின் தேதிகளுக்காக காத்துக்கொண்டிருப்பதாக’ இயக்குநர் பிரியதர்ஷினி அறிக்கை விடுத்திருக்கிறார். சமீபத்தில் முக்கியத் தலைவர்கள், பிரபலங்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் வேலை தற்போது நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இயக்குநர் பிரியதர்ஷினி  ‘தி அயன் லேடி’எனும் படத்தையும், இயக்குநர் விஜய் ‘தலைவி’ என்னும் படத்தையும் இயக்கி வருகின்றனர்.இதற்கிடையே தற்போது மூன்று முக்கிய நடிகர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் களமிறங்கும் லாரன்ஸ்…..!!

லிங்குசாமி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘காஞ்சனா 3’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண், சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் லாரன்ஸ் நடிக்கவுள்ளார். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அரசியல் பேசும் படம் ‘ரங்கஸ்தலம்’. சுகுமார் இயக்கிய இத்திரைப்படம் டோலிவுட்டில் செம […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி வாயைத்திறந்தாலே……. அந்தப் படம் பிளாக்பஸ்டர்தான்….!

அம்மா சென்டிமென்ட், பாம்பு சென்டிமென்ட் என தங்களது படம் ஹிட்டாக பல சென்டிமென்டுகளை ஹீரோக்கள் பார்க்கும் வழக்கம் கோலிவுட்டில் தொன்றுதொட்டு வரும் வேளையில், வாயைத் திறந்தால் பிளாக்பாஸ்டர் என்று ஃபார்முலாவை நடிகர் கார்த்திக்கு கண்டுபிடித்துள்ளனர். நடிகர் கார்த்தி தான் நடிக்கும் படத்தில் வாயைத் திறந்தால் போதும் அது பிளாக்பஸ்டர் என்ற புதுவித டிரெண்டை அறிமுகப்படுத்தியுள்ளனர் மீம் கிரியேட்டர்கள்.தீபாவளி ஸ்பெஷலாக கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கைதி. கார்த்தி நடித்திருக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலர் தினத்தில் வெளியாகும் தெலுங்கு ’96’

விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ’96’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் 2020 காதலர் தினத்தில் வெளியாகிறது. விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ’96’.முழு நீளக் காதலை ஓவியமாகத் தீட்டியது போன்று காதல் காவியமாக அமைந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. ’96’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கிலும் இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்த் மற்றும் த்ரிஷா கதாபத்திரத்தில் சமந்தாவும் நடிக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

HBD Tabu – நடைபோடும் பூங்காற்றே… பூங்காற்றே…!!

தேசிய விருது பெற்ற நடிகை தபுவின் (tabu) 48ஆவது பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி சிறு தொகுப்பு… ‘காதல் தேசம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தபு. அதன்பிறகு ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ஸ்நேகிதி’ என சில தமிழ் படங்களில் தபு நடித்திருக்கிறார். ஆனால் பாலிவுட், டோலிவுட்டில் அவர் மிக முக்கியமான நடிகை. இந்திய சினிமா பெருமை கொள்ளத்தக்க நடிகை தபு என்று சொன்னால் அது மிகையாகாது. ‘சாந்தினி பார்’, ‘மாச்சிஸ்’ ஆகிய படங்களில் நடித்ததற்கு சிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

‘மன்னவன் வந்தானடி’ தேவதையின் அசத்தல் புகைப்படங்கள் ….!!

இயக்குநர் செல்வராகவனின் ‘மன்னவன் வந்தானடி’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை ஆதிதி போஹங்கர். 2010ஆம் ஆண்டில் இந்தி திரையுலகில் அறிமுகமான இவர், ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் பின்வருவாறு.. அங்கே என்ன தெரிகிறது? ஸ்டைலிஷ் தமிழச்சி காட்டன் சாரி கட்டி வந்த கள்ளியே! சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே! பாக்காத என் பச்ச கிளியே! எட்டிப் பார்க்கும் பட்டாம்பூச்சி மென் வெயிலில் ஒரு கோப்பைத் தேநீர் இளம்பச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குவாலியர் நகரில் இந்தியன் 2 படக்குழு முகாம்……!!

இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் குவாலியர் நகரில் நடைபெற்று வருவதாக படத்தின் ஸ்டைலிஸ்ட் மற்றும் டிசைனர் அமிர்தா ராம் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். பிரமாண்டமாக தயாராகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷுட்டிங் தற்போது மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. போபாலில் 40 கோடி ரூபாய் செலவில் சண்டைக் காட்சியை படமாக்கிய பின்னர் படக்குழுவினர் அங்கு இடம் பெயர்ந்துள்ளனர்.கடந்த இரு வாரங்களுக்கு முன் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்களை வைத்து ஆக்‌ஷன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மம்மூட்டி-ராஜ்கிரண் இணையும் ‘குபேரன்’ திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியானது..!!

மம்மூட்டி-ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகிவரும் ‘குபேரன்’ திரைப்படத்தின் முதல் பார்வை (ஃபஸ்ட் லுக்) போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் மம்மூட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிவரும் திரைப்படம் ‘குபேரன்’. இந்த படத்தின் மூலம் மலையாள திரையுலகில் முதன் முறையாக அடியெடுத்து வைத்துள்ளார் நடிகர் ராஜ்கிரண். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ள நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘லாக்கப்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!

வைபவ், வெங்கட் பிரபு நடிக்கும் ‘லாக்கப்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வெங்கட் பிரபுவின் சரோஜா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் வைபவ். கோவா, ஈசன், மங்காத்தா, ஆம்பள உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த இவர், மேயாத மான் படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது வைபவ், வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகிவரும் ‘லாக்கப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கிரைம் த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தை இயக்குநர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் செந்திலிடம் மோசடி செய்தவர் கைது.!!

நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை சாலிகிராமம் அருகே உள்ள பாஸ்கர் காலனி மூன்றாவது தெருவில் நடிகர் செந்திலுக்கு சொந்தமான 10 அறைகள் கொண்ட கட்டடம் உள்ளது. இதை கடந்த 2013ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் (52) என்பவர் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து “சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்” நடத்திவந்தார். இந்நிலையில் சகாயராஜ் கடந்த 6 மாதங்களாக செந்திலுக்கு வாடகை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இதயம் கனக்கிறது…. உன் மூச்சு சத்தம் தான் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது… அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்..!!

உன் மூச்சு சத்தம் தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைந்து இயங்க வைத்தது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் 2 வயதான சுஜித்  கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மீட்பு பணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“சுஜீத்தின் மரணம் மனதிற்கு வேதனையளிக்கிறது”… நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்..!!

சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுகாட்டுப்பட்டியில் சுஜித் வில்சன்  (2 வயது) சிறுவன் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் முயற்சித்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. அவனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவமைந்தன் கார்த்தி சிவபக்தனாக ருத்ர தாண்டவம் – நடிகை ஆர்த்தி

‘கைதி’ படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அமைத்திருக்கும் ஒவ்வொரு காட்சியையும் தான் நேசிப்பதாக நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தீபாவளி விருந்தாக வெளியான படம் கைதி. மாநகரம் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.படம் பார்த்த அனைவருக்கும் கைதி டில்லியை பிடித்துப்போய்விட்டது. அந்த அளவுக்கு இப்படத்தில் கார்த்தி தனது நடிப்பால் மிரட்டியிருப்பது அவரை அடுத்த கட்டத்துக்கு கூட்டிச்சென்றுள்ளது. இந்தப் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தெறி’ பேபி… இனி ‘மாஸ் மகாராஜ்’ – தெலுங்கில் ஹீரோ யாருன்னு தெரியுமா…?!

விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படம் தெலுங்கில் ரீமேக் செய்வது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தந்தை – மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் பிகில். அட்லி இயக்கிய இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜயின் மைக்கேல் கதாபாத்திரம் கால்பந்தாட்ட பயிற்சியாளராவும், ராயப்பன் கதாபாத்திரம் லோக்கல் டானாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், இந்துஜா, யோகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விரைவில் எனக்கு திருமணம்”…. ஆனால் ஒருசில கண்டீஷன்… மனம் திறந்த காஜல்..!!

விரைவில் தன்னை திருமணக் கோலத்தில் பார்க்கலாம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார். பேரரசு இயக்கத்தில் பரத் நடித்திருந்த பழனி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தொடர்ந்து சரோஜா, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், கோமாளி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால், சமீபத்தில் பிரபல தெலுங்கு தனியார் வலைதள ஊடகத்தில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல’ பட நடிகைக்கு புதிய வாய்ப்பு… வெளியானது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.!!

பிக்பாஸ் புகழ் அபிராமி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் அபிராமி. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அபிராமிக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. தற்போது அபிராமி ‘கஜன்’ என்னும் மலேசிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அபிராமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எஸ். மதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

க்யூட்டான குடும்பப் படத்தை பதிவிட்டு தீபாவளி வாழ்த்து கூறிய நடிகை ஜோதிகா!

தீபாவளி பண்டிகையையொட்டி நடிகை ஜோதிகா, தனது கணவர் சூர்யா மற்றும் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும்நிலையில் பல்வேறு பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஜோதிகா தனது குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் தனது கணவர் சூர்யா, மாமனார் சிவக்குமார் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளியை…பொங்கலாக மாற்றிய ரஜினியின் ‘தர்பார்’!

ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள ‘தர்பார்’ படத்தின் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘தர்பார்’. லைகா நிறுவன தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நிறைவுபெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ், படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் எல்லாம் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தீபாவளி வாழ்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ராயப்பன் குறித்த கேள்வி” செஞ்சிட்டா போச்சு பதிலளித்த அட்லி….!!

பிகில் படத்தில் வந்த ராயப்பன் குறித்த சுவாரஸ்யமான கேள்வியொன்றுக்கு இயக்குநர் அட்லி தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார். விஜய் – அட்லி கூட்டணியில் நேற்று (அக்.25) வெளியாகியுள்ள திரைப்படம் ‘பிகில்’. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் இத்திரைப்படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

HBD Asin – இடையினம் தேடி இல்லை என்றேன்…!!

M. Kumaran Son of Mahalakshmi படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அசின், சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இன்று அசின் தனது 34ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். M. Kumaran Son of Mahalakshmi படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அசின் ‘கஜினி’, ‘வரலாறு’, ‘போக்கிரி’ என தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத சில படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். M. Kumaran […]

Categories
சினிமா தமிழ் சினிமா

30 நாளில் கைதி 2 ….. ”மிஸ் பண்ண மாட்டேன்” நடிகர் கார்த்தி..!!

கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கைதி பற்றி சுவாரஸ்ய அனுபவங்களை நடிகர் கார்த்தி பகிர்ந்து கொண்டார். நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் லோகேஷு கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படம் சிறை வாழ்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதை. இது நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில் கைதி படத்தின் அனுபவங்களை நடிகர் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் , இந்த மாதிரி படத்தை மிஸ் பண்ண மாட்டேன். சிறந்த கூட்டு முயற்சி. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கைதி”க்கு நல்ல வரவேற்பு…. திரும்பி வருவான் டில்லி… இயக்குனர் லோகேஷ் அறிவிப்பு..!!

‘கைதி ‘ திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள ஆதரவை அடுத்து அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘கைதி 2’ குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகர் கார்த்தி-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் கைதி. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநகரம் திரைப்படத்தைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். படம் பார்த்த அனைவருக்கும் ‘கைதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘சரிலேரு நீக்கெவரு’…. கெத்தான பார்வையில் விஜயசாந்தியின் பர்ஸ்ட் லுக்..!! 

மகேஷ் பாபு நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் ‘சரிலேரு நீக்கெவரு’ திரைப்படத்தில் நடிகை விஜயசாந்தியின் கதாபாத்திரத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.    தெலுங்கின் முன்னிணி நடிகராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவர் நடிப்பில் ‘சரிலேரு நீக்கெவரு’ என்ற அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் உருவாகி வருகிறது. 2020 ஜனவரியில் வெளியாகும் இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பாரா மிலிட்டரி அதிகாரியாக மகேஷ் பாபு மிரட்டும் இந்தப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, கீதா கோவிந்தம் படப்புகழ் ராஷ்மிகா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இடக்குநராகும் பிருந்தா மாஸ்டர்…. படத்தின் ஹீரோ இவர் தான்..!!

நடன இயக்குநர் பிருந்தா இயக்குநராக அறிமுகமாகும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாத்துறையில் இந்த வேலையைத்தான் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் கிடையாது. திறமை மற்றும் கடின உழைப்பால் பிரபலங்கள் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளிலும் சாதித்துக் காட்டியுள்ளனர். அந்தவகையில், வாய்ஸ் ஆர்டிஸ்டாக இருந்த சீயான் விக்ரம் நடிகராகவும், இசையமைப்பாளர்களாக இருந்த விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிகர்களாகவும், நடிகராக இருந்த தனுஷ் இயக்குநராகவும் சாதித்துக் காட்டியவர்களின் பட்டியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன்-2” 85 வயது பாட்டியாக நடிக்கிறார் காஜல்……. வெளியான காரசார தகவல்….!!

இந்தியன்-2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் 85 வயது பாட்டியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன்-2 படம் இந்த வருடம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு நீண்டு கொண்டே செல்கிறது. இவ்வாறு இருக்கையில் இந்தியன்-2 திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அந்த படத்திற்கான கதாபாத்திரங்கள் குறித்து அவ்வப்போது ரகசியங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது காஜல் அகர்வால் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இந்தியன்-2’ படத்தில்….. கமலுக்கு மனைவியாகும் காஜல்…!!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘கோமாளி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பட்ஜெட் 50 கோடி ரூபாய்யை தாண்டி வசூல் வேட்டை செய்தது. தற்போது, ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி நடைபோட்ட ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன்-2’ படத்தில் காஜல் நடித்துவருகிறார். கமல்ஹாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அப்புறம் என்ன மயிருக்கு… “கைதி”யை விமர்சனம் செய்த இளைஞர்… சாட்டையடி பதில் கொடுத்த தயாரிப்பாளர்..!!

கைதி திரைப்படம் பற்றி மோசமான கருத்துகளைத் தெரிவித்த இளைஞருக்கு அவரது பாணியிலேயே அப்படத்தின் தயாரிப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் கார்த்தி-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இன்று திரைக்கு வந்துள்ள படம் கைதி. நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துவரும் கார்த்தி இந்த முறை கைதியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியானது. மாநகரம் திரைப்படத்தைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் வருகிறது ‘அசுரன்’…. ஹீரோ யார் தெரியுமா?

‘அசுரன்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முடிவு செய்துள்ளார். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலுக்கு ‘அசுரன்’ என்ற பெயரில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி திரைவடிவம் கொடுத்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர். இப்போது இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்தாக பரிமாறப்படவுள்ளது. படத்தில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது. பஞ்சமி நில அரசியலை முன்வைத்து பேசிய இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2 படமும் வெற்றிதான்…. ரசிகர்கள் சண்ட போடாதீங்க…. யோகி பாபு வேண்டுகோள்..!!

பிகில், கைதி திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் காமெடி நடிகர் யோகி பாபு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மெர்சல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியானது. […]

Categories

Tech |