Categories
சினிமா தமிழ் சினிமா

“பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை துணை” சிவகுமார் அட்வைஸ்….!!

தன் பிள்ளைகள் சரியான வாழ்கை துணையை தேர்ந்து எடுத்திருந்தால் அதற்கு பெற்றோர்கள் தயங்க வேண்டாம் சிவகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து நடிகர் சிவகுமார் கூறுகையில் , இளைஞர்கள் தங்கள் காதல்களை முடிந்தவரை பெற்றோரிடம் கூறிவிடுங்கள் .பெற்றோர்கள் தன் குழந்தைகள் சரியான துணையை தேர்ந்தெடுக்கும் பட்ச்சத்தில் அவர்களுக்கு மதிப்புக்கொடுங்கள். தன் மகன் சூர்யா காதல் திருமணத்திற்கு தான் தடையாக இருந்ததும் இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் , பெற்றோர்கள் தன் மகனோ அல்லது மகளோ வருங்கால வாழ்க்கை  ஏமாற்றமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி ஹாலிவுட் சினிமா

“பிரியாணியால் தல_யுடன் நட்பு” அஜித்தை புகழ்ந்த நடிகை கல்கி‌ கொய்சிலி பேட்டி…!!

பிரியாணி மீதுள்ள ஆர்வத்தால் அஜித்தும் நானும் நன்பர்கள் ஆகிவிட்டோம் என்று  ஹாலிவுட் நடிகை கல்கி‌ கொய்சிலி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக திகழ்பவர் தல அஜித்.இவர் படங்கள் ரீலிஸ் என்றோ அன்று தான் இவரது ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாம்.எந்த பின்புலமும் ‌‌‌‌‌‌இல்லாமல் தானாக உயர்ந்து‌ இன்று தலையாக தமிழக ரசிகர்களின் இதயத்தில் இருப்பவர் அஜித் குமார். சுயநலத்தை பார்க்காமல் ரசிகர்களுக்காக அவர்களின் நலம் கருதி ரசிகர் மன்றத்தை கலைத்தவர்‌ தல. தற்பொழுது தல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராட்சசி படத்திற்கு தடை” ஆசிரியர் சங்கம் கோரிக்கை …!!

அரசு பள்ளிகளை கொச்சை படுத்தியதால் ஜோதிகாவின் ராட்சசி படத்திற்கு தடை விதிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுமுக இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் ,ஜோதிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய படம் ராட்சசி.இந்த படத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களை தவறாக சித்தரித்துள்ளமையால் இந்த படத்திற்கு தடைகோர வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது,ஜோதிகா நடிப்பில் வெளியாகிய ராட்சசி படம் அரசுப்பள்ளி ஆசிரியர்களை தவறாக சித்தரித்து இருக்கிறது.அரசு பள்ளிகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை காலமானார்.!

இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார்   கடந்த 2012-ம் ஆண்டு ‘அட்டகத்தி’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழில் அறிமுகமானவர் பா ரஞ்சித். அதன் பிறகு மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி வெற்றிகண்டார். அதை தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி, காலா படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். பா ரஞ்சித்தின் தந்தை M.பாண்டுரங்கன் (63) கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சி… அதுக்கப்பறம் பழகிடுச்சி- ஸ்ருதி ஹாசன்..!!

சிறிய இடைவெளிக்கு பிறகு ஸ்ருதி ஹாசன் தற்போது விஜய்சேதுபதிக்கு  ஜோடியாக தமிழில் ’லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்த போது குண்டாகி விட்டார் என்று கிண்டல் செய்தனர். இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டியில், சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. சமீபத்தில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் ஸ்ருதிக்கு திருமணம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயுடன் மோதும் விஜய் சேதுபதியின் படம்………..

விஜயின் பிகில் படத்துடன் சேர்ந்து விஜய் சேதுபதியின் படம் ரிலீஸ்  ஆவதால் ரசிகர்களுக்கிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. தளபதி விஜய் நடித்து வரும்  பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் போஸ்ட் புரொடொஷன்ஸ் பணிகள், வியாபாரம் மற்றும் பிரமோஷன் ஆகியவை ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழுவினர்கள் எல்லாரும் சேர்ந்து பரிந்துரை செய்து முடிவு எடுத்துள்ளனர். விஜயின் திரைப்படத்தினை மக்கள் ஆரவாரத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற வேலையில்  விஜய் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ண முடியாது “விஷால் மனு நிராகரிப்பு”நீதிமன்றம் அதிரடி..!!

நடிகர் சங்க தேர்தல் வாக்குகளை எண்ண அனுமதி வழங்க கோரி விஷால் அளித்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நடிகர் சங்க தேர்தலை தடை செய்யக்கோரி தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால்  தேர்தலை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால்   வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டனர்.  இதையடுத்து ஜூன் 23ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன்” திருமணம் வேண்டாம்னு சொன்ன ஓவியா..!!

“நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்றும், அதனால் எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்றும் ஓவியா தெரிவித்துள்ளார்.  நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இதனால் இவருக்கு என்று தனி ரசிகர்களே இருக்கின்றனர்.  ஓவியா நடித்த களவாணி படம் வெற்றி படமாக அமைந்தது. இதனால் களவாணி படத்தின் இரண்டாம் பாகமான களவாணி 2-விலும் ஹீரோயினாக நடித்துள்ளார். சற்குணம் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் விமல், விக்னேஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் […]

Categories
சினிமா

“பெண்களாக மாறிய ஆண்கள்” காமெடி தர்பாராக மாறிய பிக்பாஸ் வீடு..!!

தொடர்ந்து சண்டை சச்சரவு என சென்று கொண்டிருந்த பிக்பாஸ் வீடு இன்று கலகலவென சிரித்த வண்ணம் இருந்தது. தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒலிபரப்பிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 வெற்றியைத் தொடர்ந்து சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக  அறிமுகப்படுத்தப்பட்டன. நாளுக்கு நாள் மிக சுவாரசியமான புதுப்புது நிகழ்வுகளை இந்நிகழ்ச்சி […]

Categories
சினிமா

“நட்பை விட காதல் தான் முக்கியம்”காதலை பகிரங்கமாக தெரிவித்த பிக்பாஸ் பிரபலம்..!!

கவின்,சாக்க்ஷி நண்பர்களாக நெருங்கி பழகி வந்த நிலையில் கவின் மீது காதல் வயப்பட்டதாக சாக்க்ஷி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒலிபரப்பிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 வெற்றியைத் தொடர்ந்து சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக  அறிமுகப்படுத்தப்பட்டன. நாளுக்கு நாள் மிக சுவாரசியமான புதுப்புது நிகழ்வுகளை இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பி […]

Categories
சினிமா

“கார்னர்..கார்னர்..பாரிஸ் கார்னர்”எரிச்சலூட்டும் வனிதா பேச்சு..!!

தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று லொஸ்லியா கோபத்தின் உச்சத்தை அடைந்தார். இந்தியாவில் ஹிந்தி,தெலுங்கு,மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றைத் தொடர்ந்து சீசன் 3யை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள […]

Categories
சினிமா

“பிக்பாஸ் வீட்டில் தொடர் சண்டை “பொறுத்தது போதும் பொங்கி எழு….நாற்காலியை தூக்கியடித்த லொஸ்லியா..!!

தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று லொஸ்லியா கோபத்தின் உச்சத்தை அடைந்தார். இந்தியாவில் ஹிந்தி,தெலுங்கு,மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றைத் தொடர்ந்து சீசன் 3யை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள […]

Categories
சினிமா

பிக்பாஸ் வீட்டில் தொடரும் போலீஸ் வேட்டை…கைதாகும் மற்றொரு பிக்பாஸ் பிரபலம்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர் மீரா மிதுன் குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.  இந்தியாவில் ஹிந்தி,தெலுங்கு,மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றைத் தொடர்ந்து சீசன் 3யை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காதல் சண்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி சித் ஸ்ரீராமால் பாட முடியாது “வருத்தத்தில் ரசிகர்கள்…!!

சித் ஸ்ரீராமின் நடவடிக்கை சரியில்லாததால் இசையமைப்பாளர்கள் சங்கம் அவருக்கு பாட தடை விதித்துள்ளது.  2013ஆம் ஆண்டு வெளியில் வந்த கடல்  திரைப்படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரகுமான் “அடியே” என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மென்மையான குரல் கொண்ட சித்ஸ்ரீராமை அறிமுகப்படுத்தினார். ஆனால் அப்பாடல் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் “ஐ” திரைப்படத்தில் ‘என்னோடு நீ இருந்தால்’ என்ற பாடலை பாட மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்தார். இப்பாடல் எதிர்பார்த்ததைவிட கூடுதல் வெற்றியை […]

Categories
மாநில செய்திகள்

“கைதாகும் சரத்குமார் “நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

காசோலை மோசடி வழக்கில்  நடிகர் சரத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டை  பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர்  ரேடியன் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 2 கோடி கடன் வாங்கினர் . அதை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததால் ரேடியன் நிறுவனம் இருவர் மீதும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்ட  நிலையில் இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு   வந்தது.  இதில்    சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார்  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கின்னஸ் சாதனை படைத்த இயக்குனர் விஜயநிர்மலா காலமானார்..!!

இயக்குநரும், பழம்பெரும் நடிகையுமான விஜய நிர்மலா இன்று அதிகாலை காலமானார்.   சென்னையை சேர்ந்த விஜயநிர்மலா (73) குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். இவர் சிறுவயதில் (7) மச்சரேகை (1950) படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் எங்க வீட்டு பெண், சித்தி, சோப்பு சீப்பு கண்ணாடி, என் அண்ணன், ஞானஒளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பணமா பாசமா என்ற படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர்.  எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் உட்பட அப்போதைய கதாநாயகனுடன் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பரபரப்பான சூழலில் நடிகர் சங்க தேர்தல்..!!463 பேர் வாக்குபதிவு

நடைபெற்று வரும் நடிகர் சங்கத்தேர்தலில் இதுவரை 463 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரபல நடிகர்கள் முதல் சின்னத்திரையில் நடித்து வரும் சிறு நடிகர்கள் நாடக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பதவி ஆசை பிடித்தவர் விஷால் “நடிகர் ஆரி பரபரப்பு குற்றசாட்டு..!!

விஷாலுக்கு பத்தி ஆசை இருப்பதாகவும் அவரது பதவி ஆசியால் தான் இந்த தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்றும் நடிகர் ஆரி குற்றம் சாட்டியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு தரப்பினர் இந்தத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனல் பறக்கும் நடிகர் சங்க தேர்தல் களம்…படப்பிடிப்புகள் ரத்து..!!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருவதன்  காரணமாக இன்று ஒருநாள் படப்பிடிப்பானது ரத்து  செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர்கள் முதல் சின்னத்திரையில் நடிக்கும் சிறிய நடிகர்கள், நாடக நடிகர்கள் உட்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் பிறந்தநாள் பரிசு….. மாஸாக வெளியான ‘பிகில்’ செகண்ட் லுக்..!!

 நேற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் 12 மணிக்கு விஜயின் பிறந்த நாள் பரிசாக  இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது  அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி இணைந்துள்ளனர். இந்த படம் சமூக வலைத்தளங்களில் விஜய்யின்  63-வது என்று அழைக்கப்பட்டு வந்தது. இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது “பிகில்” ஃபர்ஸ்ட் லுக்…. ரசிகர்கள் கொண்டாட்டம்.!!

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் விஜய்யின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது  அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி இணைந்துள்ளனர். இந்த படம் சமூக வலைத்தளங்களில் விஜய்யின்  63-வது என்று அழைக்கப்பட்டு வந்தது. இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் […]

Categories
அரசியல் கடலூர் மாநில செய்திகள்

“ரஜினி முதல்வராக வேண்டும்” சிதம்பரம் கோயிலில் சிறப்பு யாகம் …!!

2021_இல் ரஜினிகாந்த முதல்வராக வரவேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அண்ணா , கலைஞர் , MGR மற்றும் ஜெயலலிதா என அனைவருமே கலைத்துறையில் சாதித்தவர்கள் . அவர்கள் அரசியலிலும் ஜொலித்தார்கள். இவரை போல நடிகர் விஜயகாந்த் , சீமான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களால் கணிசமான வாக்குகளே பெற முடிந்தது. இந்நிலையில் சமீப காலமாக அரசியலுக்கு எப்போது வருவாரா , எப்போது வருவார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆளுநரை சந்தித்த சுவாமி சங்கரதாஸ் அணியினர்..!!

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக விஷால் ஆளுநரை சந்தித்த நிலையில் பாக்யராஜ் , ஐசரி கணேஷ் அணியினரும் தமிழக ஆளுநரை சந்தித்து பேசியுள்ளனர் . வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. அடுத்தடுத்து ஏற்பட குழப்பங்களால் தேர்தல் நடத்த தடை விதித்து தென் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சங்க தேர்தல் ரத்து “தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

நடிகர் சங்க தேர்தல் பணிகளை நிறுத்தஉள்ளதாக தேர்தல் ஆணையர் பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது சரியானது தான்”எஸ்.வி.சேகர் கருத்து ..!!

சட்ட ரீதியாக  எந்த நிகழ்வும் நடிகர் சங்கத்தில் நடைபெறவில்லை என்று நடிகர் எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிட இருந்தன. ஆனால் 23_ஆம் தேதி நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவு ..!!

நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு  தென்சென்னை மாவட்ட சங்ககளின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார் . தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் 23_ஆம் தேதி நடிகர் SV சேகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்னரை சந்தித்த பாண்டவர் அணியினர்… நடிகர் சங்க தேர்தலில் தொடரும் பரபரப்பு..!!!

நடிகர் சங்க தேர்தலில் போற்றிடும் பாண்டவர் அணியினர் திடீரென ஆளுநரை சந்தித்து பேசியது தேர்தல் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் […]

Categories
சினிமா

“மங்காத்தாவை போல் அமையும் நேர்கொண்ட பார்வை “மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!!

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட பணிகள் அதிவேகத்துடன் நடைபெற்று வருகிறது. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படமானது ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினரால்  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது இருந்த போதிலும் அதற்கு முன்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி படம் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில் படத்திற்கான தொழில்நுட்ப பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் அஜித்  உட்பட அனைத்து கதாபாத்திரங்களின் டப்பிங் பணிகள் முடிவடைந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடா என்ன அழகு…. நடிகை ராஷ்மிகாவின் அட்டகாசமான புகைப்படம்..!!

நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தானா பிரபல கன்னட நடிகை ஆவார். இவர் விஜய் தேவரகோண்டவுக்கு ஜோடியாக  “கீதா கோவிந்தம்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்கள்  அனைவரையும் கவர்ந்தார். இந்த படம் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழில் முதல் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

தல அஜித்தின் “நேர் கொண்ட பார்வை” படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.  நடிகர் அஜித்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது நடிப்பினால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளார். ரசிகர்களால் செல்லமாக தல என்று இவர் அழைக்கப்படுகிறார். இவரது படம் மற்றும் ட்ரெய்லர் ஏதாவது ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் படம் குறித்த எதையாவது ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். இது ரசிகர்களின் வாடிக்கையான செயல். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள “நேர் கொண்ட பார்வை ட்ரெய்லர்” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முழுமையாக ஒதுக்கிவிட்டார்கள்” அதிமுகவில் இணைந்த ராதாரவி பேட்டி..!!

திமுகவில் என்னை முழுமையாக ஒதுக்கிவிட்டார்கள் என்று எண்ணியதால் நான் கட்சியிலிருந்து விலகிவிட்டேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்  கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திமுகவில் இருந்து நீக்கம்” அதிமுகவில் இணைந்த ராதாரவி..!!

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்  கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ராதாரவி திமுக அடிப்படை […]

Categories
சினிமா

பிரபல நடிகர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி ..!!

பிரபல நடிகர் க்ரிஷ் கர்னாட் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார் . கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான கிரிஷ் கர்னட் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார் .81 வயது பூர்த்தி அடைந்த இவர்  திரைப்பட காலங்களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலன், செல்லமே ,ரட்சகன் உள்ளிட்ட படங்களிலும் பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். உடலின் அனைத்து பாகங்களும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பெங்களூரில் உயிரிழந்தார். இவர் ஞானபீட விருது மற்றும் நாட்டின் உயரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராய் லட்சுமி நடிக்கும் அடுத்த படம்….!!!

நடிகை ராய்லட்சுமி தனது அடுத்த படத்தில் 3 வேடங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர். நடிகை ராய் லட்சுமி கடைசியாக ஜெய், வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் ஆகியோருடன் தமிழில் நீயா 2 என்ற படத்தில் நடித்துள்ளார்.  இந்த படம் ரசிகர்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றாலும் கூட நடிகை ராய்லட்சுமி சோர்வடையாமல் தற்போது அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். சிண்ட்ரெல்லா என்னும் இப்படத்தில் நடிகை ராய்லட்சுமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேர்மையான போலீஸ் அதிகாரியாக மிரட்டும் தன்ஷிகா..!!

நடிகை தன்ஷிகா “யோகி டா” படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நடிகை தன்ஷிகா ரஜினிகாந்த் நடித்த `கபாலி’ படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், தன்ஷிகா ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தன்ஷிகா நேர்மையாக இருப்பதால் அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார்? என்பதே படத்தின் கதை. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மனோபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா-3’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

`”வல்லவனுக்கும் வல்லவன்” 4 வேடத்தில் அசத்தும் பிரபல நடிகர்..!!

பாபிசிம்ஹா “வல்லவனுக்கும் வல்லவன்”என்ற படத்தில் 4 வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜிகணேசன் ‘நவராத்திரி’ என்ற படத்தில் 9 வேடங்களிலும், உலக நாயகன் கமல்ஹாசன் `தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களிலும்  நடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்களைப் போலவே  பிரபல நடிகர்கள் 2 , 3 வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் பாபிசிம்ஹா,”வல்லவனுக்கும் வல்லவன்” என்ற படத்தில் 4 வேடங்களில் நடித்து இருக்கிறார். இவருடன்  ஷிவதா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்தராஜ், சங்கிலிமுருகன், அப்புக்குட்டி ஆகியோர்  நடித்துள்ளனர்.  விஜய் தேசிங் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் […]

Categories
அரசியல்

நடிகர்கள் அரசியலில் குதிப்பது ஏன்..??, ரஜினிக்கு சீமான் அறிவுரை ..!!

மோடி வெற்றிக்கு கருத்து தெரிவித்த ரஜினிக்கு சீமான் அறிவுரை குறித்து தற்போழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . மக்களுக்காக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத நடிகர்கள் அரசியலில் குறிப்பதற்கான காரணம் என்ன என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் திரைப்படத்தின் மீதும் அதில் நடிக்கக்கூடிய கதாநாயகர்கள் மீதுமான கவர்ச்சி தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது. ஆகையால் கட்சி தொடங்கிய உடன் ஏராளமான மக்கள் நடிகர்களின் பின் சென்று ஏமாந்துவிடுகிறார்கள். இதனால் மக்களுக்காக போராட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் NGK திரைப்படத்தின் இமோஜி “ரசிகர்கள் மகிழ்ச்சி !!..

என்.ஜி.கே திரைப்பட வெளியிடை முன்னிட்டு திரைப்படக்குழு இமோஜி ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது . நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன்  நடிகர் சூர்யா rakul-preet-singh சாய் பல்லவி ஆகியோரைக் கொண்டு என் ஜி கே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது வருகின்ற மே 31-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .இந்நிலையில் வரவிருக்கும் இத்திரைப்படத்தை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் இப்போதே ஆயத்தமாகி விட்டார்கள். அதன் ஒரு பகுதியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“வெளியானது சகோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் “உற்ச்சாகத்தில் ரசிகர்கள் !!..

பிரபல நடிகர் பிரபாஸின் சகோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்படத்தில் பாகுபலி மூலம் மக்களிடையே அதிக பிரபலம் ஆனவர் பிரபாஸ் . இவர் தற்பொழுது பாகுபலியை விட பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு வரும் சகோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்று  வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார் .அதில்,  சகோ படத்திற்கான அபிஷியல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மணி நேரங்களில்  வெளியிடப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியானது ”ராங்கி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!!!

இயக்குனர் சரவணன் இயக்கத்தில், திரிஷா நடிப்பில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள்ளது.  ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். இப்படத்தை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட சில படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் சரவணன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்சன் படத்தை தற்போது இயக்கவுள்ளார். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இதைத்தொடர்ந்து திரிஷாவின் சதுரங்க வேட்டை 2, கர்ஜனை ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக  உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சியில் களமிறங்கும் நடிகை அடா சர்மா…!!!!

நடிகை அடா சர்மாவின் கவர்ச்சி புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில்  டிரெண்ட் ஆகிவருகிறது.  நடிகை அடா சர்மா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ”இது நம்ம ஆளு” படத்தில் நடனமாடி திரையில் அறிமுகமான நடிகை அடா சர்மா சமீபத்தில் வெளியான  சார்லி சாப்லின் 2 படத்தில் நடித்துள்ளார். அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடும் நடிகை அடா சர்மா தற்போது ”மேன் டூ மேன்” என்னும் படத்தில் நடித்து வருகிறார். நடிகை அடா சர்மா இந்த படத்தில் பெண்ணிலிருந்து ஆணாக மாறும் கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைரலாக பரவும் ராணாவின் புதிய வேடம் …!!!

பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் படத்தில் நடிக்கும் ராணாவின் வேடம் இணையத்தில் வைரலாக பரவுகிறது . பிரபல இயக்குனர் பிரபு சாலமன் தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் லாடம், கிங், உசிரே, கொக்கி, கண்ணொடுகாண்பதெல்லாம், லீ, மைனா, கயல், கும்கி  போன்ற  படங்களை இயக்கியுள்ளார். இதில் சில படங்களுக்காக விருதுகளும் வாங்கியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் பிரபு சாலமன் ஒரே படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற 3 மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த மூன்று படங்களிலும் நடிகர் ராணா கதாநாயகனாகவும், சோயா ஹுசைன்  கதாநாயகியாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாவுக்கும் எனக்கும் தகறாரா…. கடிதம் மூலம் பதிலடி கொடுத்த சமந்தா…!!!

பொய்யாக பரவிய தகவலுக்கு கடிதம் மூலம் பதிலடி கொடுத்த நடிகை சமந்தா.   தமிழ் சினிமாவின் கனவு கன்னி என்று அழைக்கப்படும் சமந்தா வளர்ந்து வரும் பிரபல நடிகை ஆவார். சமந்தாவுக்கும்  அவரது அம்மாவுக்கும் தகராறு என்று சமீபத்தில் தகவல் பரவியது. இந்த தகவலை பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுக்க  தனது தாய்க்கு நடிகை சமந்தா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனது தாய் செய்யும் வழிபாடுகள் எப்பொழுதும் எனக்கு நம்பிக்க்கையை தரும். அவரது பிரார்த்தனை என் வாழ்வில் சில மாயங்கள்  செய்துள்ளன. நான் சிறுமியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பிறந்த நாளன்று வெளியாகும் ”தளபதி 63”_ன் டைட்டில்…!!

அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 63_ல் புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் படம் தளபதி  63. கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிதுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் புதிதாக நடிகை அம்ருதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் 60_வது படத்தில் இணையும் இசையமைப்பாளர்..!!

எச். வினோத் இயக்கும் தல அஜித்தின் 60_வது படத்தில்  பிரபல  இசையமைப்பாளர் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த ஜனவரி மாதம் தல அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிகண்ட  படம் விஸ்வாசம். அதிக வசூல் கண்ட இந்த படத்தை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், இப்படம் வருகின்ற ஆகஸ்ட்-10_ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தல அஜித்தின் 60_வது படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர்” பிரபல பாடகி பாலியல் புகார்….!!

தெலுங்கு சினிமாவில் பிரபல பாடகிகளில் ஒருவராக வளம் வரும் பிரணவி, பிரபல இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபல பாடகிகளில் ஒருவர் பிரணவி. இவர் ஸ்ரீ ராமதாசு, ஹேப்பி டேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட பல படங்களில் பாடி புகழ் பெற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனரான ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சினிமாவில் நான் பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் பலர் தனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ராந்த் நடிப்பில் உருவாகும் “பக்ரீத்” படத்தின் புதிய அறிவிப்பு….!!

இயக்குனர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பக்ரீத்’. இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். இந்த படைத்த எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து வருகிறார். இப்படத்தின் டீசர் மற்றும் ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படத்தின் இசையை மே 17-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மற்றோரு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்…!!!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றோரு கவர்ச்சி புகைப்படம் வெளிட்ட மாளவிகா மோகனன்.  தற்போது தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்கள் அறிமுகமாகி வருகின்றனர். இந்த வரிசையில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது வெளிவந்த படம் தான் ”பேட்ட”. இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இவர் இந்த படத்தில் நன்றாகவே நடித்துள்ளார். இந்நிலையில் மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் தனது கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இதற்கு உடை அணியாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தில் இணையும் அம்மு அபிராமி….!!

இயக்குனர்  ஜித்து ஜோசப் இயக்கும்  திரில்லர் படத்தில் கார்த்தியும் , ஜோதிகாவும் இணைந்து  நடிக்கும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அம்மு அபிராமி நடிக்கவுள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு சகோதரியாக ஜோதிகா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சீதா நடிக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் அன்சன் பால் நடிக்கிறார். இந்நிலையில், ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திகில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லியாகும் வரலட்சுமி…!!

சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்த வரலட்சுமி அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லியாக நடிக்கஉள்ளார். 2017-ஆம் ஆண்டு பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அதன் பின்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாதையை அமைத்துக் கொண்ட வரலட்சுமிக்கு தற்போது தெலுங்கு சினிமாவில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக […]

Categories

Tech |