தமிழ்நாட்டிலிருந்து இரு திராவிடக் கட்சிகளும் அகற்றப்படவேண்டும் என கூறும் தமிழருவி மணியன் ஒரு தொகுதியில் நின்று வென்று விட்டு பேசட்டும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார். நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே தனியார் பேருந்து விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களைச் சந்தித்து கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல் கூறினார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ நடிகர் சங்கத் தேர்தலில் நியாயமான முடிவை ஏற்படுத்த முடியாத மூத்த […]
