ஊரடங்கு உத்தரவால் தமிழ் புத்தாண்டை வீட்டிலிருந்தே கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்துள்ளன. கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அதிகாலையிலேயே பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று வழிபடும் நடைமுறைகள் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி […]
