குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு முதலமைச்சர் காட்டமான பதிலடி கொடுத்தார். சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதையடுத்து அதிமுக கழக உறுப்பினர்களுக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுந்து தி.மு.க. உறுப்பினர்களுக்கு காட்டமாக பதிலளித்தார். சட்டப்பேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசினார். […]
