Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழக காவல் துறையில் அவசர வேலை அறிவிப்பு..!!

 தமிழக காவல்துறையில் அவசர வேலை வாய்ப்பு; இந்த வேலை ஊரடங்கு காரணமாக காவல் துறையுடன் இணைந்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் எடுக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று பணியில் சேரலாம். பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் முன்வரலாம். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள். வயது வரம்பு: 40 முதல் 50 வரை இருக்க வேண்டும்    

Categories
மாநில செய்திகள்

அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகம் வெளியிட தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு!

தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் வெளியிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு தேர்வுகள் ஒத்திவைப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் 10ம் வகுப்புக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மகப்பேறு மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்காவிடில் மருத்துவமனை அங்கீகாரம் ரத்து – தமிழக அரசு எச்சரிக்கை!

மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைகளை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. டயாலிசிஸ், கீமோதெரபி தொடர்பான அத்தியாவசிய சிகிச்சைகளையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சிஏஏ தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு முக்கிய ஆலோசனை!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்தம் மூலம் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசு சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து விதமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் பதில் அளிக்க […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி மு.க. ஸ்டாலின் மனு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி துறையில் ஊழல் நடக்கிறது, அரசு அதிகாரிகள் பலர் ஊழலுக்குத் துணை போகின்றனர். சுமார் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு – தமிழக அரசு!

ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மைச் செயலர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அறிவிப்பில், தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டின் கால அவகாசம் பிப். 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. […]

Categories
மாநில செய்திகள்

‘மருத்துவர்கள் மீதான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்’ – உயர்நீதி மன்றம்..!!

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆடி பெருக்கு திருவிழாவிற்கு 2000 கன அடி நீர் திறப்பு… மக்களிடையே சோகம் !!

நாளை  ஆடி பெருக்கு  திருவிழாவை  முன்னிட்டு  2000 கன  அடி  நீர்  திறக்க  தமிழக அரசு  முடிவுசெய்துள்ளது . ஆடிபெருக்கு  திருவிழாவை  முன்னிட்டு  நாளை  காலை  11.30 மணிக்குமேட்டூர்  அணையில்  இருந்து  வினாடிக்கு  1,000 கன அடியில்  இருந்து  2,000 கன அடி    திறந்து  விடப்படுவதாக  பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.திறந்து விடப்படும்  தண்ணீர்  ஈரோடு  மற்றும்  கரூர்  வரை  செல்வதற்கான  சார்த்தியக்கூறுகள் இருக்கும்  நிலையில்  டெல்டா  மாவட்டமான  கடையமடை  வரை  செல்வதற்கு  வாய்ப்புயில்லை. ஏனென்றால்  குடிநீர்  தேவைக்காக  கரையோர  மக்கள்  அணையில்  இருந்து  […]

Categories
மாநில செய்திகள்

“டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு” தமிழக அரசு அதிரடி …!!

தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 2000  ஊதிய உயர்வு வழங்கப்படுமென்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை  கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மர்க் ஊழியர்கள் , விற்பனையாளர்கள் , உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ள அறிவிப்பில் ,  டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியமாக 2000 உயர்த்தி வழங்கப்படும். இதனால்    […]

Categories

Tech |