தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இதுவரை 1 கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தல் ஆகிய பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட அவகாசம், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர்கள் வருகிற நவம்பர் 18ஆம் தேதி வரை சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இப்பணிகளை ஆய்வு செய்ய பத்து ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தலைமைத் தேர்தல் […]
