அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பணியின்போது தகராறு ஏற்பட்டதில் சக ஊழியர்கள் 5 பேரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டல்லாஹஸ்ஸி (Tallahassee) நகரத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் அன்ட்வான் பிரவுன் (Antwann Brown) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பணியின்போது சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சக ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி வெளியே சென்ற பிரவுன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து […]
