கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்துவருகின்றனர். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் வருகின்றது. இந்தியாவில் வைரஸ் பரவல் அதிகரிக்க டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநாடுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.. அதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. […]
