நடிகை டாப்சி முதல்முறையாக நியூயார்க் சென்ற அனுபவத்தை ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக அடுத்த மாதம் 14ஆம் தேதிவரை நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது வீட்டில் முடங்கியுள்ளனர். ஓய்வில்லாமல் எப்போதும் கடிகாரம் போல் தொடர்ந்து சுற்றித் திரிந்த அவர்கள், தற்போது வீட்டில் முடங்கியுள்ளதால் ஏதாவது செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். […]
