யுஏஇ-க்கு எதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றுப் போட்டி கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நமீபியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேபோல ஐக்கிய அரபு அமீரகம் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் போராடி தோற்றது. இந்நிலையில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் […]
