மகளிர் டி20 போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஏழாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டு அரைசதங்கள் உட்பட 216 ரன்கள் அடித்தார். இந்நிலையில், மகளிர் டி20 போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. […]
