சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். சிரிய நாட்டில் இத்லிப் மாகாணம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அவர்களிடம் இருந்து எப்படியாவது மாகாணத்தை மீட்க வேண்டும் என ரஷிய படையின் உதவியுடன் சிரிய ராணுவம் தொடர்ந்து கடுமையாக போராடி வருகிறது. இந்த போராட்டத்திற்கு இடையே அந்த மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இத்லிப் மாகாணத்தின் சமாகா மற்றும் ஹவாய்ன் நகரங்களில் உள்ள இரண்டு ராணுவ […]
