ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் இந்தத் தொடரில் 99 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். 2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஆறுமுறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், செர்பிய வீரர் ஃபிலிப் கிரஜினோவிக்குடன் ( Filip Krajinovic) பலப்பரீட்சை நடத்தினார். […]
