அமாவாசை தினத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தலூர் கிராமத்தில் இருக்கும் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை தினத்தையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் பால், இளநீர், தேன் மற்றும் தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று இருக்கிறது. இதில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் கோவிலில் வலம் வந்து மண்டபத்தின் நடுவில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு நடைபெற்றிருக்கிறது. […]
