குப்பைகளை தரம் பிரிக்கும் விவகாரத்தில் துப்புரவு பணியாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நாகல்கேணி பகுதியில் கோட்டையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கோட்டையாவும் , ஆதிகேசவன் என்ற சக தூய்மை பணியாளரும் இணைந்து நியூ காலனி பகுதியில் உள்ள பிரதான சாலையில் குப்பைகளை சேகரித்து வாகனத்தில் ஏற்றி உள்ளனர். அப்போது அந்த குப்பைகளில் கிடந்த பிளாஸ்டிக் பைகளை தரம் பிரிப்பது […]
